For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே அணிக்குள் வரும் இஷாந்த் சர்மா.. தீபக் சாஹரால் அடித்த லக்.. பிசிசிஐ உருவத்தில் வந்த சிக்கல்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இஷாந்த் சர்மா விளையாட ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே 14 கோடி ரூபாய் கொடுத்து தீபக் சாஹரை வாங்கியது. ஆனால் காயம் காரணமாக அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதே ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்றும் எந்த அணியும் இஷாந்த் சர்மாவை எடுக்கவில்லை. இதனால் யாரும் எதிர்பாராத ஒரு சோகம் அவருக்கு ஏற்பட்டது.

வாழ்க்கை ஒரு வட்டம்

வாழ்க்கை ஒரு வட்டம்

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய இஷாந்த் சர்மா, தற்போது ஐபிஎல் தொடரில் கெஸ்ட் பாக்ஸ் எனப்படும் திரையில் மக்களோடு மக்களாக வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தளபதி விஜய் தன்னுடைய படத்தில் கூறிய வாழ்க்கை ஒரு வட்டம் டா என்பது போல் இஷாந்த் சர்மா வாழ்க்கையிலும் நடந்துள்ளது.

ஐபிஎலில் இஷாந்த்

ஐபிஎலில் இஷாந்த்

தற்போது காயத்தால் தொடரிலிருந்து விலக உள்ள தீபக் சாஹருக்கு பதிலாக இஷாந்த் சர்மாவை ஒப்பந்தம் செய்ய சிஎஸ்கே அணி முடிவு எடுத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இஷாந்த் 84 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எக்னாமியும் 7 புள்ளி 5 தான். இஷாந்த் சர்மா தனது உயரம் மூலம் பந்தை நன்றாக பவுன்ஸ் செய்ய கூடியவர். வேகமாகவும் பந்துவீசுவார்.

காத்திருப்பு

காத்திருப்பு

மேலும் டி20 போட்டிக்கான அனுபவத்தையும் இஷாந்த் கொண்டுள்ளார். இஷாந்த் காயம் காரணமாக இந்தியாவுக்காக சில போட்டியில் விளையாடமால் இருந்தார். பின்னர் குணமாகியும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மன விரக்தியில் உள்ள இஷாந்த் சர்மா, தற்போது ஒரு வாய்ப்புக்காக காத்துள்ளார். தற்போது அது சிஎஸ்கே மூலம் கிடைத்தால் மனுஷன் பட்டையை கிளப்புவார்.

பிசிசிஐயால் சிக்கல்

பிசிசிஐயால் சிக்கல்

எப்படி 2010ஆம் ஆண்டு போலிங்கர் வந்தவுடன் சென்னை அணி வெற்றி பாதைக்கு திரும்பியதோ, அதே போல் இஷாந்த் சர்மாவும் சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடி தருவார். ஆனால் இதற்கு பிசிசிஐ அனுமதி வழங்க வேண்டும். தீபக் சாஹர் அடுத்த ஆண்டுக்கு எல்லாம் தேவைப்படுவார் என்பதால், இஷாந்த் சர்மாவை தற்காலிமாக பயன்படுத்தி கொள்ள பிசிசிஐ அனுமதிக்க வேண்டும். இல்லையேனில் தீபக் சாஹர் கையை விட்டு நழுவி போய்விடுவார்.

Story first published: Tuesday, April 12, 2022, 22:15 [IST]
Other articles published on Apr 12, 2022
English summary
IPL 2022 – CSK May select Ishant sharma to replace Deepak chahar- Reports சிஎஸ்கே அணிக்குள் வரும் இஷாந்த் சர்மா.. தீபக் சாஹரால் அடித்த லக்.. பிசிசிஐ உருவத்தில் வந்த சிக்கல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+