
தொடக்கம் சொதப்பல்
குறிப்பாக சென்னை அணியின் ஆஸ்தான தொடக்க வீரராக இருந்த டுபிளஸிஸ், ஆர்சிபி அணிக்கு சென்றுவிட்டார். இதனால் புதிய வீரராக களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கான்வேவும் சொதப்பினார். இதனை அனைத்தையும் விட பெரிதும் சிஎஸ்கே நம்பிக்கை வைத்த ருத்துராஜ் கெய்க்வாட் ஃபார்மில் இல்லாதது போல் விளையாடு வருகிறார்.

பவர்பிளே ஸ்ட்ரைக்ரேட்
இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு முதல் பவர்பிளேவில் இந்த ஜோடி வேகப்பந்துவீச்சை எப்படி எதிர்கொண்டது என்று தரவுகள் மூலம் பார்க்கலாம். ருத்துராஜ் வேகப்பந்துவீச்சை பவர்பிளேவில் எதிர்கொண்ட போது வெறும் 90 ஆக தான் உள்ளது. இதே போன்று கான்வேயின் ஸ்ட்ரைக் ரேட் 113 புள்ளி 82 ஆக உள்ளது.

கலக்கும் உத்தப்பா
கடந்த சீசனில் இதே சிக்கல் ருத்துராஜ்க்கு இருந்தாலும் அந்த குறையை டுபிளஸிஸ் போக்கினார். இதனால் டுபிளஸிஸ் போல் அதிரடியாக ஆடக்கூடிய வெளிநாட்டு வீரரை சிஎஸ்கே அணியில் இல்லை. ஆனால் தரவுகள் படி பார்த்தால், 2021ஆம் ஆண்டு முதல் பவர் பிளேவில் ரைபின் உத்தப்பா மட்டும் தான் 151ஸ்ட்ரைக்ரட் வைத்துள்ளார்.
Recommended Video

புதிய ஜோடி
இதனால் ராபின் உத்தப்பாவை தொடக்க வீரராக சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. இருப்பினும் கான்வேக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்று பயிற்சியாளர் ஃபிளமிங் யோசனை தெரிவித்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணிக்கு உத்தப்பா மூலம் புதிய தொடக்க ஜோடி தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிடைக்க உள்ளது. மூன்றாவது வீரராக மொயின் அலியும், 4வது வீரராக ராயுடுவும் களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











