Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 கேட்சை மிஸ் செய்த சிஎஸ்கே.. கேம் ஸ்ப்ரிட்டை காப்பாற்றிய தோனி.. கவாஸ்கர் பாராட்டு

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி கேம் ஸ்பிரிட்டை காப்பாற்றினார்.

மும்பை பார்போன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே பஞ்சாப் அணி கேப்டன் மாயங் அகர்வால் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து இலங்கை அணியின் அதிரடி வீரர் ராஜபக்சா தோனியின் அபார செயல்பாட்டால் ஆட்டமிழந்தார்.

24 ரன்கள்

24 ரன்கள்

பஞ்சாப் அணி 14 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். சௌத்ரி வீசிய ஒரு ஓவரில் 6,0,4,4,4,6 என 24 ரன்களை லிவிங்ஸ்டோன் விளாசினார். இதன் பின்னர் பிராவோ வீசிய ஓவரிலும் தவான் 16 ரன்களை பறக்கவிட்டார்.

கோட்டைவிட்ட ராயுடு

கோட்டைவிட்ட ராயுடு

இதனால் பஞ்சாப் அணி பவர்பிளேவில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்தது. 7வது ஓவரை கேப்டன் ஜடேஜா வீச அவரது பந்தையும் லிவிங்ஸ்டோன் சிக்சருக்கு பறக்கவிட்டார். அந்த ஓவரின் 5வது பந்தில் லிவிங்ஸ்டோன் தூக்கி அடிக்க முற்பட்டு, அது ராயுடு கைக்கு வந்தது. ஆனால் ராயுடு அந்த ஈஸி கேட்சை கோட்டை விட்டார்.

தோனி கேட்ச்

தோனி கேட்ச்

இதனால் லிவிங்ஸ்டோனுக்கு 45 ரன்களில் ஒரு லைஃப் கிடைத்தது. இதனையடுத்து அடுத்த ஓவரை பிரிட்டோரியஸ் வீசினார். இதனையடுத்து 7.2 ஓவரில் பிரிட்டோரியஸ் லேக் சைடில் வீசிய பந்தை லிவிங்ஸ்டோன் அடிக்க முயன்றார். அந்த பந்தை தோனி பறந்து பிடித்தார். எனினும் தாம் பந்தை தெளிவாக பிடித்தேனா என்ற சந்கேம் இருந்ததால், நடுவரிடம் மறு பரிசீலினை செய்யும்மாறு தோனியே சைகையில் காட்டினார்.

தோனி நேர்மை

தோனி நேர்மை

இதனால் நடுவர்கள் மறுஆய்வு செய்த போது பந்தை தோனி பிடித்தாலும், பந்து தரையில் பட்டது தெளிவாக தெரிந்தது. அதனையடுத்து நடுவர் அவுட் இல்லை என அறிவித்தார். தோனி போட்டியை நேர்மையாக விளையாடுவதாக கவாஸ்கர் பாராட்டினார். எனினும் இந்த 2 வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட லிவிங்ஸ்டோன் 32 பந்தில் 60 ரன்கள் விளாசினார்.

Story first published: Sunday, April 3, 2022, 21:15 [IST]
Other articles published on Apr 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+