Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரியா போச்சு.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மேலும் ஒரு சிஎஸ்கே வீரர்.. தோனி போட்ட கணக்கு சரி தான்!

மும்பை: ஐபிஎல் தொடரிலிருந்து மேலும் ஒரு சிஎஸ்கே வீரர் விலகியுள்ளது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே அணி விளையாடிய 6 போட்டியில் ஒன்றில் மட்டுமே வென்று, மற்ற 5 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.

இதன் மூலம் புள்ளி பட்டியலில் அந்த அணி 9வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் எஞ்சியுள்ள போட்டியில் குறைந்தது 7 ஆட்டங்களில் சிஎஸ்கே வெல்ல வேண்டும்.

திடீர் விலகல்

திடீர் விலகல்

சிஎஸ்கே அணியிலிருந்து ஏற்கனவே தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான கான்வே ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கான்வேவை வைத்து சிஎஸ்கே தமிழக முறைப்படி திருமண நிகழ்ச்சி எல்லாம் நடத்திய நிலையில் ஏன் இந்த முடிவு என்று ரசிகர்கள் புலம்பினர்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

ஆனால் கான்வேக்கு அடுத்த வாரத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதனை முடித்துவிட்டு தேனிலவுக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கான்வேக்கு திருமணம் இருப்பதை அறிந்து தான், தோனி அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

தோனியின் செம பிளான்

தோனியின் செம பிளான்

கான்வே தொடக்க வீரராக களமிறங்கி செட்டான பிறகு அணியிலிருந்து விலகினால், அது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இதனை கருத்தில் கொண்டே அவருக்கு திருமணம் என்று தெரிந்த உடனே, ராபின் உத்தப்பாவை வைத்து சிஎஸ்கே காய் நகர்த்தியது.கான்வே திரும்பி வந்த பிறகு அணியில் தேவை ஏற்பட்டால் கான்வே பிளேயிங் லெவனில் களமிறங்கலாம்.

Recommended Video

Virat Kohli Needs a Break, Says Ravi Shastri | OneIndia Tamil
திருமண பரிசு

திருமண பரிசு

கான்வே விலகிய நிலையில், சிஎஸ்கே அணியில் ஏதேனும் வீரருக்கு விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால், இந்திய வீரர்களை வைத்தே சமாளிக்க வேண்டிய நிலைக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டுள்ளது. கான்வே திரும்பி வந்ததும் அவருக்கு திருமண பரிசாக தொடக்க வீரர் வாய்பபு தரப்படலாம்.

Story first published: Wednesday, April 20, 2022, 21:19 [IST]
Other articles published on Apr 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+