Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எரிமலையாக வெடித்த ராபின் உத்தப்பா.. 2வது முறையாக ஏமாற்றிய ருத்துராஜ்.. சிஎஸ்கே ரன்குவிப்பு

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் தொடரின் 7வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், லக்னோ அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசியது.

சென்னை அணியில் மொயின் அலி, பிரிட்டோரியஸ் மற்றும் முகேஷ் சௌத்ரி ஆகியோர் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

இதே போன்று தொடக்க வீரராக முதல் ஆட்டத்தில் களமிறங்கிய கான்வே நீக்கப்பட்டு, ராபின் உத்தப்பா தொடக்க வீரராக புரோமேஷன் பெற்றார்.

கிடுகிடுவென உயர்வு

கிடுகிடுவென உயர்வு

ஆவேஷ் கான் வீசிய ஆட்டத்தின் முதல் 2 பந்திலேயே பவுண்டரிகளை விளாசி ராபின் உத்தப்பா அதிரடி தொடக்கத்தை அளித்தார். இதே போன்று சமிரா வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரில் உத்தப்பா தனது பழைய ஸ்டைலில் ஷாட்களை ஆடி சிக்ஸ் பவுண்டரி என விரட்டினார். இதனால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.

தொடர்ந்து பவுண்டரி

தொடர்ந்து பவுண்டரி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் தேவையில்லாமல் ஓடி ரன் அவுட் ஆனார். இதன் பின்னர் உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்த மொயின் அலி, அதிரடி காட்டினார். இதனால் இந்த ஜோடியை கட்டுப்படுத்த முடியாமல் ராகுல் திணறினார். இதன் பின்னர் ஆண்டிரு டை வீசிய 5வது ஓவரில் ராபின் உத்தப்பா 4 பவுண்டரிகள் உள்பட 18 ரன்களை விளாசினார்.

உத்தப்பா அரைசதம்

உத்தப்பா அரைசதம்

இதனால் 10 ஆண்டுகளுக்கு முன் ராபின் உத்தப்பாவை பார்த்த மாதிரி இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர். வேகப்பந்துவீச்சை சிஎஸ்கே அடித்து நொறுக்குவதை உணர்ந்த ராகுல் சுழற்பந்துவீச்சாளரை பந்துவீச அழைத்தார். ஆனால் அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. குர்னல் பந்துவீச்சை பவுண்டரி, சிக்சர், பவுண்டரி என மொயின் அலி அடிக்க அந்த ஓவரில் 16 ரன்கள் அடித்தது.

Recommended Video

LSG vs CSK : Badoni, Lewis help LSG seal maiden IPL win with victory over CSK | Oneindia Tamil
100 ரன்கள்

100 ரன்கள்

இதனால் சிஎஸ்கே அணி பவர் பிளேவில் 73 ரன்களை விளாசியது. சிறப்பாக விளையாடிய உத்தப்பா 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். உத்தப்பா 50 ரன்களில் ரவி பிஸ்னாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய மொயின் அலி 35 ரன்களில் பெவிலியன் திரும்பினார். சிஎஸ்கே அணி 9.1வது ஓவரிலே 100 ரன்களை எட்டியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 31, 2022, 21:01 [IST]
Other articles published on Mar 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+