சச்சின் சாதனை சமன் செய்த ருத்துராஜ்.. ஐதராபாத் பந்துவீச்சை சிதறடித்த சிஎஸ்கே..பழைய சிஎஸ்கே ரிட்டர்ன்
புனே: ஐபிஎல் தொடரின் 15வது சிசனில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.
Recommended Video
இந்த சீனில் தொடர்ந்து சொதப்பி வந்த ருத்துராஜ் இன்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சாதனையை சமன் செய்தார்.

ஐதராபாத் அணியின் பந்துவீச்சை இம்முறை செம பலத்துடன் உள்ளது. புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலின், நடராஜ்ன், யான்சென் ஆகியோர் உள்ளனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வில்லியம்சன் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனையடுத்து, இந்தப் போட்டியில் புது மாப்பிள்ளை கான்வேவும், ருத்துராஜ் கெய்க்வாட்டும் தொடக்க வீரராக களமிறங்கினர். முதல் ஓவரில் சிஎஸ்கே 3 ரன்கள் மட்டுமே அடித்தது. யான்சென் வீசிய 2வது ஓவரில் ருத்துராஜ் பளார் என சிக்சருக்கு பந்தை விரட்டினார்.
இதனைத் தொடர்ந்து இருவரும் அதிரடியாக விளையாடினர். பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி சிஎஸ்கே 40 ரன்கள் எடுத்தது. நடப்பு சீசனில் முதல் முறையாக சிஎஸ்கே அணி தொடக்க வீரர்கள் பவர்பிளேவில் ஆட்டமிழக்க இருந்தனர்.
அதன் பிறகு ருத்துராஜ் ராக்கெட் வேகத்தில் ரன் குவித்தார். 33 பந்துகளில் அரைசதம் கடந்த ருத்துராஜ், ரன் குவிப்பை 5வது கியருக்கு நகர்த்தினார். 10.5வது ஓவரில் சிஎஸ்கே அணி 100 ரன்களை கடந்தது. இந்த இன்னிங்ஸ் மூலம் ருத்துராஜ் கெய்க்வாட், 31இன்னிங்சில் ஆயிரம் ரன்களை விளாசியதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சச்சின் சாதனையை சமன் செய்தார். ஐதராபாத் எதிராக அதிக ரன்கள் ஓபனிங் பார்ட்னர்சிப் வைத்த ஜோடி என்ற பெருமையை ருத்துராஜ், கான்வே படைத்தது.


Click it and Unblock the Notifications