Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ருத்துராஜ் கோரிக்கை.. உருக்கமான பேச்சு..தொடர்ந்து சொதப்பிய பிறகு சூளுரை

மும்பை: ஐபிஎல் தொடரின் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சீசன் தொடக்கத்தில் ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.

இதற்கு முக்கிய காரணம், ருத்துராஜ் தொடர்ந்து சொதப்பி வருவதும் மற்றும் பந்துவீச்சில் அனுபவம் இல்லாத இந்திய வீரர்கள் இருப்பதே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இன்னும் 11 போட்டிகளே உள்ள நிலையில் சிஎஸ்கே அதிகபட்சம் 9 போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.

விமர்சனம்

விமர்சனம்

இந்த நிலையில், சிஎஸ்கே ஏலத்துக்கு முன்பே தக்கவைத்து கொண்ட ருத்துராஜ் 0,1,1 என 3 போட்டியில் 2 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதனால் ருத்துராஜ் கெய்க்வாட்டை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு சிலர் ருத்துராஜை விமர்சித்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

சிஎஸ்கே ஆதரவு

சிஎஸ்கே ஆதரவு

ஆனால் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு வழங்குவோம் என்று சிஎஸ்கே அணி கேப்டன் ஜடேஜா தெரிவித்துள்ளார். ருத்துராஜ் தங்கள் அணியின் முக்கியமான வீரரும், அவர் பழைய ஃபார்ம்க்கு திரும்ப வருவார் என்றும் அவர் கூறினார். இதே கருத்தை வலியுறுத்திய சிஎஸ்கே சி.இ.ஓ. காசி விஸ்வநாதன், ருத்துராஜ்க்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றார்.

உருக்கமான கோரிக்கை

உருக்கமான கோரிக்கை

இந்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ருத்துராஜ் கெய்க்வாட் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை அளித்துள்ளார். அதில், சிஎஸ்கே ரசிகர்கள் அனைவருக்கும் ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள். எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். கடந்த முறை நாங்கள் தான் சாம்பியன் அணி

உறுதி அளிக்கிறேன்

உறுதி அளிக்கிறேன்

இம்முறை நாங்கள் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம். உங்கள் அனைவருக்கும் நான் உறுதி அளிக்கிறேன். இனி வரும் போட்டிகளை வெல்ல நாங்கள் 100 சதவீதத்திற்கும் மேல் பங்களிப்பை கொடுப்போம் என்று கூறியுள்ளார். கடந்த 2 சீசனிலும் முதல் 3 போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அவர், 4வது போட்டியில் அரைசதம் விளாசினார். இதனால் ருத்துராஜ் இம்முறையும் அரைசதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Tuesday, April 5, 2022, 16:18 [IST]
Other articles published on Apr 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+