Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

200 ரன்கள் மேல் அடித்தது எப்படி? ருத்துராஜ் அளித்த ருசிகர தகவல்.. டார்கெட் முடிவு பண்ணது இப்படி தான்

மும்பை: ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே தொடக்க ஜோடியான கான்வே, ருத்துராஜ் ஆகியோர் 110 ரன்களை சேர்த்தனர்.

இதன் மூலம், நடப்பு சீசனில் தொடர்ந்து 100 ரன்களுக்கு மேல் இந்த ஜோடி அடித்தது. டாஸை தோனி இழந்த போது முதலில் நாங்களும் பந்துவீச தான் இருந்ததாக கூறினார்.

அப்படி இருக்க, எப்படி சிஎஸ்கே 200 ரன்கள் மேல் அடித்தது. அதுமட்டுமல்ல புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ள சிஎஸ்கே தான், இந்த தொடரில் அதிக முறை 200 ரன்களை அடித்த அணி என்ற பெருமையை பெற்றது.

ஆடுகளம் கணிப்பு

ஆடுகளம் கணிப்பு

டார்க்கெட்டை எப்படி முடிவு எடுக்கிறீங்க என்று ருத்துராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், முதலில் ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைத்தது போல் தெரிந்தது. ஆனால் நேரம் ஆக, ஆக, ஆடுகளம் தொய்வு ஏற்படும் என கணித்தோம்.

அதிரடியாக ஆட காரணம்

அதிரடியாக ஆட காரணம்

அத்னால், இப்போது தான் பேட்டிங் செய்ய சரியான நேரம். பந்து பேட்டிற்கு நன்றாக வருகிறது என்பதை உணர்ந்து இருவரும் அதிரடியாக விளையாடினோம். அது நல்ல பலனை அளித்தது. கான்வே சிறப்பாக பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டார். நாங்கள் கணித்தது போலவே ஆடுகளம் தொய்வாக மாறியது.

நெருக்கடி அளித்தோம்

நெருக்கடி அளித்தோம்

ஆனால், அதற்குள் நாங்கள் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திவிட்டோம். நோக்கியா உலகின் முன்னணி பந்துவீச்சாளர் ஒருவர். டெல்லி அணியின் தனித்துவமான வீரராக விளங்குகிறார். இதனால் அவரை முதல் பந்தில் இருந்தே அடித்து, அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயற்சித்தோம். அது நல்ல பலனை தந்தது.

டிப்ஸ் கொடுத்த ருத்துராஜ்

டிப்ஸ் கொடுத்த ருத்துராஜ்

கான்வேவும், சிறப்பாக அவரை எதிர்கொண்டார். எங்களால் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்ததில் மகிழ்ச்சி. டெல்லி அணியும் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடுவார்கள். உங்கள் ஓவரில் சில சிக்சர்கள் போகலாம். அதன் பின் நீங்கள் ஓயிடாக பந்துவீசி, பேட்ஸ்மேன்களை மைதானத்தின் பெரிய பகுதியில் அடிக்க வைத்து ஆட்டமிழக்க வைக்கலாம். இது தான் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு நான் கூறும் டிப்ஸ்.

Story first published: Sunday, May 8, 2022, 23:12 [IST]
Other articles published on May 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+