Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிங்கம் களமிறங்கிடுச்சி.. பயிற்சியை தொடங்கிய ருத்துராஜ்.. அப்போ ஃபிட்னஸ் ஓகே ?

சூரத்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ருத்துராஜ் கெய்க்வாட் தனது பயிற்சியை தொடங்கிவிட்டார்.

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில், சென்னை அணி சூரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

ஆனால், இந்த பயிற்சி முகாமில் ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக பங்கேற்காமல் பெங்ககளூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்தார்.

சந்தேகம்

சந்தேகம்

இதனையடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் முழு உடல் தகுதி பெற்றதாக செய்திகள் வெளியானது. எனினும் சென்னை அணி நிர்வாகம் அவரை முழுமையாக பரிசோதனை செய்த பிறகே, பயிற்சியை தொடங்க அவருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ருத்துராஜ் பங்கேற்பாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்தது.

பயிற்சி தொடக்கம்

பயிற்சி தொடக்கம்

இந்த நிலையில், நேற்றைய பயிற்சி முகாமில் ருத்துராஜ் வலை பயிற்சியில் களமிறங்கிவிட்டதாக சிஎஸ்கே அணி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மூன்று ஃபயர் எமோஜி விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ருத்துராஜ், அணிக்கு திரும்பியதன் மூலம் சென்னை அணியின் பலம் அதிகரித்துள்ளது.

கண்காணிப்பு

கண்காணிப்பு

எனினும் இந்த பயிற்சியின் போது ருத்துராஜ்க்கு ஏதேனும் வலி ஏற்படுகிறதா, அவரால் ஷாட்களை முழுமையாக விளையாட முடிகிறதா என்று மருத்துவ குழு அவரை தொடர்ந்து கண்காணித்தே வரும். அதன் பிறகு சிஎஸ்கே மருத்துவக் குழு ஓகே சொன்னால் மட்டுமே சிஎஸ்கேவின் முதல் போட்டியில் ருத்துராஜை நாம் காண முடியும்.

ருத்துராஜ் ஃபார்ம்.

ருத்துராஜ் ஃபார்ம்.

இதே போன்று ருத்துராஜ் அதே ஃபயருடன் இருக்காரா இல்லை அவரது ஃபார்ம் இழந்திருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் ருத்துராஜ் கடந்த 3 மாதமாக எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. இது அவரது பேட்டிங்கை பாதிக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும் ருத்துராஜ் அது மஞ்சள் ஜெர்சியை போட்டால் வேற லெவலுக்கு சென்று விடுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Story first published: Saturday, March 19, 2022, 20:59 [IST]
Other articles published on Mar 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+