இம்முறை சிஎஸ்கே தான் ஜெய்க்கும்..!! தோனி மேல் நம்பிக்கை இருக்கு.. ஸ்ரீனிவாசன் நெகிழ்ச்சி பேச்சு
சென்னை: ஐபிஎல் 15வது சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று அந்த அணியின் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல். நடப்பு சீசனில் சென்னை அணி தனது முதல் லீக் போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதுகிறது. இந்த தொடருக்காக சூரத்தில் சென்னை அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
40 பேர் கொண்ட குழுவுடன் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இம்முறை கோப்பை வென்றால் மும்பை அணியின் சாதனையை சிஎஸ்கே சமன் செய்துவிடும்.

சிஎஸ்கே வெல்லும்
இந்த நிலையில், சிஎஸ்கே அணி கேப்டன் தோனியுடன் காணொலி காட்சி மூலம் என். ஸ்ரீனிவாசன் பேசினார். அப்போது பேசிய அவர், எனக்கு தோனி மீது நம்பிக்கை உள்ளது. இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் கோப்பையை வெல்லும். அதற்காக தோனிக்கு அழுத்தம் தரவில்லை. பலமான சிஎஸ்கே அணியை தோனி உருவாக்கியுள்ளார்.

சாதகமான பயிற்சி
சிஎஸ்கே அணிக்கு வந்துள்ள சிவம் துபே, ராஜ்வர்த்தனேவை வரவேற்கிறேன் என்று ஸ்ரீனிவாசன் கூறினார். இதற்கு நன்றி தெரிவித்து பேசிய கேப்டன் தோனி, சூரத்தில் 2 வாரங்களுக்கு முன்பு பயிற்சியை தொடங்கினோம். இது எங்களுக்கு சாதகமான விசயமாகும். நாங்கள் ஒருவரை பற்றி ஒருவர் அறிந்து கொள்ள இந்த பயிற்சி உதவியது. பல வீரர்கள் ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காகவும், பல ஐபிஎல் அணிக்காகவும் விளையாடி உள்ளனர்.

ஹங்கர்கேகர்
இதனையடுத்து பேசிய ஆல்ரவுண்டர் ஹங்கர்கேகர், சென்னை அணி என்னை தேர்ந்து எடுத்ததற்கு மிகவும் நன்றி. சென்னை அணியின் வெற்றிக்காக கடுமையாக முயற்சி செய்வேன். சென்னை அணிக்காக முழு திறனுடன் விளையாடி, சிஎஸ்கே அணிக்கு பெருமை சேர்ப்பேன் என்று பேசினார்.

2 ஆல்ரவுண்டர்கள்
இதனிடையே, சிஎஸ்கே பிளேயிங் லெவனில் தீபக் சாஹர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சிஎஸ்கே ராஜவர்த்தன் ஹங்கர்கேகர் மற்றும் சிவம் துபே ஆகிய இருவருக்கும் தோனி வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக தோனி, இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பேச வைத்தார்.


Click it and Unblock the Notifications