Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாயாஜால சுழற்பந்துவீச்சாளரை இறக்கிய சிஎஸ்கே.. எஸ்ஆர்ஹச் அணியில் 7 அடி உயர பந்துவீச்சாளர்.. மஜா தான்

சென்னை: ஐபிஎல் தொடரின் இன்று முக்கியமான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி, ஐதராபாத்தை எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் முதல் முறையாக பகல் ஆட்டத்தில் சிஎஸ்கே களமிறங்குகிறது.

இதனால் பனிப்பொழிவு சிக்கல் இருக்காது என்பதால் சிஎஸ்கே வீரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் சிஎஸ்கேவிற்கு வில்லியம்சன் படையின் சவால் காத்திருக்கிறது.

இரு அணிகளுமே முதல் வெற்றிக்காக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

சாதகம்

சாதகம்

இதுவரை சிஎஸ்கே, ஐதராபாத் அணிகள் 16 முறை மோதியுள்ளனர். இதில் சிஎஸ்கே 12 முறையும், ஐதராபாத் 4 முறை மட்டுமே வென்றுள்ளது. 5 நாள் விடுமுறைக்கு பிறகு சிஎஸ்கே வீரர்கள் விளையாட உள்ளதால் அவர்கள் தங்களது அணியில் உள்ள குறையை சரி செய்து இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

சிஎஸ்கே குறை

சிஎஸ்கே குறை

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை ருத்துராஜ் கெய்க்வாட் தொடர்ந்து சொதப்புவது பின்னடைவாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியிலும் அவர் ரன் குவிக்க தவறினால் பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது சிக்கலாகி விடும். இதே போன்று மொயின் அலி, ஜடேஜா ஆகியோர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஜொலித்தால் மட்டுமே சிஎஸ்கே பழைய சிஎஸ்கே போல் மாறும்.

மாயாஜால வீரர்

மாயாஜால வீரர்

இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா டாஸை இழந்தார். இதனால் வில்லியம்சன் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். ஆடுகளத்தில் பனிப்பெழிவு இருக்காது என்பதால், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் சிஎஸ்கே அணி, இலங்கை சுழற்பந்துவீச்சாளர் தீக்சனாவை பிளேயிங் லெவனில் களமிறக்கியது. ஆனால் அவருக்கு பதிலாக நன்றாக பந்துவீசக் கூடிய பிரிட்டோரியஸை நீக்கி இருப்பது சரியான முடிவாக தோன்றவில்லை.

7 அடி உயரம்

7 அடி உயரம்

இருப்பினும் தீக்சனா கட்டுக்கோப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையான வீரர். அவருக்கு பேட்டிங்கும் வரும் என்பது கூடுதல் சிறப்பு. பல ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை வீரர் ஒருவர் சிஎஸ்கே அணிக்காக களம் காண்கிறார். இதே போன்று ஐதராபாத் அணியில் உயரமான தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ ஜென்சன் விளையாடுகிறார். இதே போன்று அப்துல் ஷமத் நீக்கப்பட்டு சாஷாங்க் சேர்க்கப்பட்டுள்ளார்.

Story first published: Saturday, April 9, 2022, 16:52 [IST]
Other articles published on Apr 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+