Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவின் ஓப்பனர் இவர்தானா?.. இந்திய வீரரை தட்டித்தூக்கும் தோனி.. ரசிகர்கள் உற்சாகம்!

பெங்களூரு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓப்பனிங்கிற்காக இந்திய வீரர் ஒருவரை தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த 2 நாட்களுக்கு பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

2018ம் ஆண்டிற்கு பிறகு முதல்முறையாக நடத்தப்படும் இந்த மெகா ஏலத்தில் 590 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.

சிஎஸ்கே திட்டம்

சிஎஸ்கே திட்டம்

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தூணாக இருந்ததே ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் தான். கடந்த சீசனில் ருதுராஜ் கெயிக்வாட் - டூப்ளசிஸ் ஆகியோர் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்திருந்தனர். ஆனால் டூப்ளசிஸ் அந்த அணி கழட்டிவிட்டதால், அவரின் இடத்திற்கு வேறு வீரரை ஏலம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தவானுக்கு குறி

தவானுக்கு குறி

அந்தவகையில் இந்திய வீரர் ஷிகர் தவானை ஏலம் எடுக்க கேப்டன் தோனி, பரிந்துரைத்துள்ளார். அவருக்காக அதிக தொகையையும் செலவு செய்யலாம் எனக்கூறியுள்ளதாக தெரிகிறது. டெல்லி அணிக்காக நிலையான தொடக்கத்தை கொடுத்து வந்த தவான், வயதை காரணம் காட்டி வெளியேற்றப்பட்டார். ஆனால் தென்னாப்பிரிக்க தொடர் மூலம் தனது ஃபார்மை மீண்டும் நிரூபித்துக்காட்டியுள்ளார்.

சிஎஸ்கேவுக்கு நன்மை

சிஎஸ்கேவுக்கு நன்மை

சென்னை அணிக்கும் பல நன்மைகள் உள்ளன. சென்னை அணி எப்போதுமே அனுபவ வீரர்களுக்கு தான் விரும்பும். அந்தவகையில், ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவம் உள்ளவர் ஷிகர் தவான். தவான் இந்திய வீரர் என்பதே மற்றொரு சுவாரஸ்ய விஷயமாகும். இதன் மூலம் சிஎஸ்கே கூடுதலாக வேறு ஒரு அயல்நாட்டு வீரரை மிடில் ஆர்டரில் களமிறக்கிக்கொள்ள முடியும்.

இடதுகை ஜோடி

இடதுகை ஜோடி

ஒவ்வொரு அணியும் பேட்டிங்கில் இடது கை, வலது கை ஜோடியை அதிகளவில் விரும்பும். அந்தவகையில், தவான் ஒரு இடதுக்கை வீரர் என்பதால் ருதுராஜுடன் சேர்ந்து ஓப்பனிங்கில் நல்ல அடித்தளம் அமைக்க முடியும். வயதானவர் என்பதால், மற்ற அணிகளும் அதிக ஆர்வம் காட்டாது என்பதால், குறைந்த விலையிலேயே சிஎஸ்கே அவரை வாங்கிக்கொள்ளலாம்.

Story first published: Friday, February 11, 2022, 18:43 [IST]
Other articles published on Feb 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+