லக்னோ அணிக்கு தோனி வைத்த வேட்டு.. சிஎஸ்கேவில் களமிறங்கும் பீஸ்ட்.. ராகுலுக்கு நெருக்கடி
மும்பை: ஐபிஎல் 15வது சீசன் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும், லக்னோ அணியும் மோதுகிறது.
முதல் வாரம் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது மெல்ல மெல்ல சூடு பிடிக்க தொடங்கிவிட்டது.
ரவுண்ட் ஒன்றில் முன்னணி அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது 2வது ரவுண்ட் தொடங்கிவிட்டது.

கட்டாயம்
சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா முதல் போட்டியில் களமிறங்கி தோல்வியை கண்டார். இதனால் இன்றைய ஆட்டத்தில் வென்றே தீர வேண்டும் என்ற அழுத்தத்தில் சிஎஸ்கே உள்ளது. இது நீண்ட நெடுந்தொடர் என்றாலும், தொடக்கத்தில் பெறும் வெற்றிகள் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல் இருக்கும்.

சந்தேகம்
இதனால் இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா வெறும் டாஸ் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர்களிடம் பேச மட்டும் கேப்டனாக செயல்படுவார். மற்ற விவகாரங்களில் தோனியே கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று முதல் போட்டியில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்று சொதப்பிய சிவம் துபேவுக்கு இன்றைய ஆட்டத்தில் இடம் கிடைப்பது சந்தேகமே.

அதிரடி ஆல்ரவுண்டர்
இதனால் அவருக்கு பதிலாக குட்டி பாண்டியா என்று அனைவராலும் அழைக்கப்படும் ஹங்கர்கேகர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க வைக்க தோனியும், ஜடேஜாவும் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. பவுலிங் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் ஹங்கர்கேகர், பேட்டிங்கிலும் பெரிய ஷாட் ஆடக்கூடியவர், இதனால் முதல் போட்டி மாதிரி விக்கெட் வீழ்ந்தாலும் இறுதியில் வந்து பஞ்ச் வைக்க கூடியவர்.
Recommended Video

வெளிநாட்டு வீரர்கள்
இதே போன்று பிளேயிங் லெவனில் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் பிரிட்டோரியஸ், இன்றைய ஆட்டத்தில் இடம்பெறவும் வாய்ப்புள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஜொலிக்க கூடிய வீரர் என்பதால் சிஎஸ்கே நிர்வாகம் இந்த முடிவு எடுத்துள்ளது. மொயின் அலியும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார் என்பதால் லக்னோ அணி கேப்டன் ராகுலுக்கு இது நெருக்கடியை தான் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications