Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்போ கேதர் ஜாதவ்.. இப்போ ஜார்டன்.. சிஎஸ்கே வெற்றியை தடுத்த சிஎஸ்கே வீரர்.. நோ பாலால் மாறிய ஆட்டம்

புனே: ஐபிஎல் 15வது சீசனில் 29வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியும் திரில் வெற்றி பெற்றது.

Recommended Video

கடைசி நேரத்தில் மாறிய போட்டி.. CSK-க்கு மீண்டும் ஒரு தோல்வி

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக ஹர்திக் விலகிய நிலையில், ரஷித் கான் கேப்டனாக செயல்பட்டார்.

குஜராத் அணியில் அல்சாரி ஜோசப் மற்றும் சாஹா ஆகியோர் பிளேயிங் லெவனில் களமிறங்கினர். சிஎஸ்கே அணி எந்த மாற்றமும் செய்யாமல், கொடை வள்ளல் ஜார்டனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது.

ருத்துராஜ் அரைசதம்

ருத்துராஜ் அரைசதம்

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மொயின் அலியும் 1 ரன்னில் போல்ட் ஆனார். இதனால் சிஎஸ்கே தடுமாறியது. தொடர்ந்து சில போட்டிகளாக சொதப்பி வந்த ருத்துராஜ் கெய்க்வாட் , இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். மறுமுனையில் 31 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்த ராயுடு, 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் விளாசினர்.

169 ரன்கள்

169 ரன்கள்

மறுமுனையில், தொடர்ந்து அதிரடி காட்டிய ருத்துராஜ் 48 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். முக்கிய கட்டத்தில் ருத்துராஜ் வெளியேற, சிஎஸ்கே அணி கொஞ்சம் தடுமாறியது.இறுதியில், சிவம் துபே 17 பந்துகளில் 19 ரன்களும் , ஜடேஜா 12 பந்தில் 22 ரன்கள் அடிக்க, சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

திணறிய குஜராத்

திணறிய குஜராத்

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. சுப்மான் கில் , விஜய் சங்கர் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேற, சாஹா 11 ரன்களும், அபினவ் மனோகர் 12 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் குஜராத் அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் சிஎஸ்கேவின் வெற்றி உறுதியானது.

கில்லர் மில்லர்

கில்லர் மில்லர்

ஆனால், அப்போது களத்துக்கு வந்த டேவிட் மில்லர் தனி ஆளாக நின்று சிஎஸ்கேவின் வெற்றியை தடுத்தார். பவுண்டரி, சிக்சர்கள் என மிரட்டிய அவர் 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். அப்போதும் சிஎஸ்கே, வெற்றி அருகில் இருந்தது. அப்போது கிறிஸ் ஜார்டன் வீசிய 18வது ஓவரில் 6,6,4,6 என 25 ரன்களை ரஷித் கான் விளாசினார். இதனால் ஆட்டமே தலைக்கீழ் மாறியது.

வில்லன் ஜார்டன்

வில்லன் ஜார்டன்

எனினும் 19வது ஓவரை பிராவோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 10 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். சிஎஸ்கே அணியில் வேறு வீரர் இல்லாததால் , எதிரணிக்கு வெற்றியை பெற்று தர ஜார்டனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. கடைசி ஓவரில் ஒரு விக்கெட்டும் வீழ்ந்தது. ஆனால் பந்தின் உயரத்தின் காரணமாக அது நோ பால் என அறிவிக்கப்பட, ஃபிரி ஹிட்டில் பட்லர் பவுண்டரி விளாச, 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் மில்லர் 51 பந்துகளில் 94 ரன்கள் அடித்தார்.

Story first published: Sunday, April 17, 2022, 23:39 [IST]
Other articles published on Apr 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+