போட்டிக்கு முன்னதாகவே இப்படியா.. சிஎஸ்கேவில் அவசர மீட்டிங் நடத்திய தோனி..? அதுவும் 2 பேருக்காக தான்!
மும்பை: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி நெருங்கி வரும் நிலையில் சிஎஸ்கே அணியில் தோனி முக்கிய வியூகத்தை வகுத்துக் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் இன்று ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.
Recommended Video
தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்விகளை தழுவியுள்ள சிஎஸ்கே அணி இன்று கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

சிஎஸ்கேவுக்கு அதிக பலம்
அதன்படி அணியில் ஓப்பனிங் சற்று பலவீனமாக இருந்தது. இதனையடுத்து ருதுராஜ் கெயிக்வாட்டிடம் இதுதான் கடைசி வாய்ப்பு, சிறப்பாக விளையாடவில்லை என்றால் ப்ளேயிங் 11ல் இடமில்லை என்பது போன்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதே போல பவுலிங்கிலும் முகேஷ் சௌத்ரி ஃபார்முக்கு வந்துவிட்டார். ஆடம் மில்னே, பிரிட்டோரியஸ், ஜோர்டன் ஆகியோர் உடற்தகுதி பெற்றுவிட்டனர்.

தோனியின் வியூகம்
இந்நிலையில் ஆர்சிபி அணியை வீழ்த்த 2 முக்கிய வியூகத்தை மட்டும் தோனி போட்டுக்கொடுத்திருப்பதாக தெரிகிறது. முதலாவதாக கேப்டன் டூப்ளசிஸ் தான். சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது தோனியின் மேற்பார்வையில் தான் டூப்ளசிஸ் பயிற்சி மேற்கொண்டிருந்தார். எனவே அவர் எந்த இடத்தில் பலவீனமாக இருப்பார் என்றும் வேகமாக அவரின் விக்கெட்டை எடுக்கவும் பவுலர்களிடம் விளக்கியுள்ளார். இதே போல ருதுராஜுடமும் டிப்ஸ் கேட்கப்பட்டுள்ளது.

2வது வியூகம் என்ன
இதே போல சிஎஸ்கேவின் முக்கிய பவுலராக இருந்த ஜோஸ் ஹாசல்வுட் இன்று ஆர்சிபிக்காக ஆடுகிறார். சிஎஸ்கேவில் உள்ள ஒவ்வொரு வீரரின் பலவீனமும் ஹாசல்வுட்டுக்கு தெரியும். எனவே அவரின் பவுலிங்கை சற்று நிதானமாக கையாளுமாறு தோனி கண்டிப்புடன் கூறியுள்ளார். ஏனென்றால் கடந்த போட்டிகளில் அவசரப்பட்டு தான் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

அடுத்த டார்கெட்
இவர்கள் இருவரும் தான் தற்போதைய டார்கெட்டாக உள்ளனர். இதனை தவிர விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகியோரின் பலவீனம் குறித்து தோனி, ஜடேஜா நன்கு அறிவார்கள். இதனால் இன்றைய போட்டி எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது.


Click it and Unblock the Notifications