Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே எடுத்த அடுத்த நொடி.. இலங்கை வீரர் நிகழ்த்திய மாயம்.. ஓ அப்ப தோனி எடுத்தது இதுக்குத்தானா!

சென்னை: சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்ட இலங்கை வீரர் மகேஷ் தீக்சானா இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிக சிறப்பாக ஆடி கவனம் ஈர்த்து உள்ளார்.

2022 ஐபிஎல் ஏலம் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சிஎஸ்கே இதுவரை 12 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது.

நேற்று மூத்த வீரர்களை சிஎஸ்கே ஏலம் எடுத்து வந்தது. இந்த நிலையில் இன்று துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே போன்ற இளம் வீரர்களை சிஎஸ்கே எடுத்து வருகிறது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இன்று சிஎஸ்கே மூலம் இலங்கை வீரர் மகேஷ் தீக்சானா ஏலம் எடுக்கப்பட்டார். இவர் 70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். கடந்த வருடம்தான் இவர் இலங்கை அணியில் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் அறிமுகம் ஆனார். அதற்கு முன் மகேஷ் உள்ளூர் போட்டிகளிலும், முதல் தர போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வந்தார். 4 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இவர் 6 விக்கெட் எடுத்துள்ளார்.

விக்கெட்

விக்கெட்

11 டி 20 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். வலது காய் ஆப் பிரேக் மிஸ்டிரி ஸ்பின் பவுலர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வருடங்களுக்கு முன் இவர் இலங்கை அண்டர் 19 அணியில் கூடுதல் எடையால் நீக்கப்பட்டார். அதன்பின் 2 வருடங்களில் 30 கிலோ எடை குறைத்து மீண்டும் அணிக்கு திரும்பி தேசிய அணியில் சிறப்பாக ஆடி வருகிறார். இன்று சிஎஸ்கே அணியில் எடுக்கப்பட்ட அடுத்த நொடியே இவர் சிறப்பாக கலக்கினார்.

இலங்கை அணி

இலங்கை அணி

இன்று இலங்கை அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி 20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 164 ரன்களை எடுத்தது. இதையடுத்து இறங்கிய இலங்கை இடை இடையே விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து கடைசி ஓவரில் இலங்கை அணி 18 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. கடைசி 3 பந்தில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி, 11 ரன்கள் எடுத்தால் டிரா என்ற நிலை இருந்தது.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இந்த நிலையில்தான் 4வது பந்தில் சிஎஸ்கே எடுத்த மகேஷ் திடீரென சிக்ஸ் அடித்து ஆட்டத்தை மாற்றினார். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்து சூப்பர் ஓவர் வரை போனது. கடைசியில் சூப்பர் ஓவரில் இலங்கை 5 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 6 ரன்கள் எடுத்து வென்றது. ஆனாலும் இன்று மகேஷ் பவுலிங் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அதிலும் மகேஷ் 31 ரன்கள் மட்டும் கொடுத்து மேக்ஸ்வெல் விக்கெட்டை எடுத்தது குறிப்பிடத்தக்கது.இதனால் சிஎஸ்கே அணி இவரை எடுத்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Sunday, February 13, 2022, 18:41 [IST]
Other articles published on Feb 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+