Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வில் சிஎஸ்கே வீரர்கள் செய்யும் காரியங்கள்..! தோனியின் புது யுத்தி..! இது செம ஐடியா!

சூரத்: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடருக்காக முதல் அணியாக சிஎஸ்கே வீரர்கள் சூரத்தில் பயிற்சி செய்து வருகின்றனர்.

இதற்காக 40 வீரர்கள் கொண்ட குழுவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சிஎஸ்கே.வின் முக்கிய வீரர்களுக்கு தனியாக ஸ்பெசல் பயிற்சியும் நடைபெறுகிறது. இதனை தோனி கண்காணித்து பல அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

பயோ பபுள்

பயோ பபுள்

இந்த நிலையில் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளும் வீரர்கள் ஓய்வு நேரத்தில் என்ன செய்வார்கள் என்று சந்தேகம் உங்களுக்கு வருவதில் நியாயம் தான். தற்போது அந்த ரகசியத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது. பயோ பபுளில் வீரர்கள் இருப்பதால் ஹோட்டலை விட்டால் தைனம், மைதானத்தை விட்டால் ஹோட்டல் என்ற நிலையிலே உள்ளனர்.

அனைத்து வசதி

அனைத்து வசதி

திரையரங்குகளுக்கோ இல்லை வெளியே ஷாப்பிங் செய்வதற்கோ இல்லை சுற்றுலா தளங்களை பார்ப்பதற்கோ அணி வீரர்களுக்கு அனுமதி தருவிதில்லை. இதனால் அனைத்து வசதிகளும் ஹேட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளே ஸ்டேசன், தியேட்டர் வசதி, பார்டி செய்வதற்கு இடம் என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

கேம்ஸ்

கேம்ஸ்

எனினும் வீரர்களுக்கு உடல் தகுதி முக்கியம் என்பதாலும், அதே சமயம் கிரிக்கெட்டிலிருந்து கவனத்தை திருப்புவதற்காகவும் தோனி எடுத்த முடிவு தான் கேம்ஸ். இதனால் சிஎஸ்கே வீரர்கள் ஓய்வு நேரத்தில் பேட்மிண்டன், ஸ்நுக்கர், டேபிள் டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் விளையாட ஊக்குவிக்கப்படுகின்றனர்.

தோனி ஐடியா

தோனி ஐடியா

இதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் உடல் தகுதியும் மேம்படும், பொழுதுப் போக்கு விசயமாகவும் இருக்கும்,கிரிக்கெட்டிலிருந்து கவனமும் திரும்பும் என ஒரே கல்லில் 3 மாங்காயை அடித்துள்ளார் தல தோனி. வீரர்கள் மனதளவில் தொய்வடையாமல் இருக்க Motivational வகுப்பு, யோகா போன்ற பயிற்சிகளும் தரப்பட உள்ளது.

Story first published: Tuesday, March 15, 2022, 19:39 [IST]
Other articles published on Mar 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+