Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ருத்துராஜ்க்கு தோனி கொடுத்த கெடு.. மாற்று வீரரை களமிறக்கும் சிஎஸ்கே..? யாருக்கு வாய்ப்பு

மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் முன் எப்போதும் இல்லாத அளவு சிஎஸ்கே சீசன் தொடக்கத்திலயே 3 போட்டியில் தோல்வியை தழுவியது.

இதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கேவின் தொடக்க வீரர் ருத்துராஜின் சொதப்பல் பேட்டிங் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. நடப்பு சீசனில் ருத்துராஜ் அடித்த ஸ்கோர் 0,1,1 என மொத்தம் 2 ரன்கள் தான் அடித்துள்ளார்.

இதனால் வரும் சனிக்கிழமை நடைபெறும் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியே ருத்துராஜ்க்கு கடைசி வாய்ப்பு என்று ஒருபுறம் கூறப்படுகிறது. மறுபுறம் ருத்துராஜ்க்கு பதில் மாற்று வீரரை களமிறக்கலாம் என்று சிஎஸ்கே முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிவோன் கான்வே

டிவோன் கான்வே

அதன் படி டுபிளஸிஸ்க்கு பதில் தற்போது நியூசிலாந்து வீரர் கான்வே வந்துள்ளார். கான்வே அதிடியாக விளையாடக் கூடிய வீரர். இடதுகை பேட்ஸ்மேன் என்பதால், இவருக்கு தாக் கூடுதல் சாதகம். கான்வே 20 சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 602 ரன்கள் அடித்துள்ளார். சராசரியாக 50 ஐ வைத்துள்ளார். ஆனால் முதல் போட்டியில் ஏமாற்றியதால், தற்போது மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அம்பத்தி ராயுடு

அம்பத்தி ராயுடு

அடுத்த இடத்தில் இருக்கும் வீரர் அனைவரும் அறிந்ததே. சென்னை அணிக்காக ஓபனிங் அல்லது நடுவரிசை என எந்த இடத்தில் களமிறக்கினாலும் கலக்கும் வீரர் அம்பத்தி ராயுடு. இதனால் தேவைப்படும் பட்சத்தில் அம்பத்தி ராயுடுவையும் தோனி தொடக்க வீரராக களமிறக்கலாம். அம்பத்தி ராயுடு ஓபனிங் சென்றால் ஹங்கர்கேகரை சிஎஸ்கே நடுவரிசையில் பயன்படுத்தலாம்.

சேனாபதி

சேனாபதி

அடுத்த இடத்தில் இருப்பவர் சேனாபதி. ஓடிசாவை சேர்ந்த இவர், ருத்துராஜை போல் விளையாடக் கூடியவர். (அதாவது ருத்துராஜ் ஃபார்மில் இருந்தால் எப்படி விளையாடுவாரோ, அப்படி) இவரை சிஎஸ்கே அணியே தனிப்பட்ட முறையில் சேனாபதியை அழைத்து, அவரது திறமையை ஆய்வு செடயது பின்னர் ஏலத்தில் தட்டி தூக்கியது.

சர்ப்ரைஸ் முடிவு

சர்ப்ரைஸ் முடிவு

இதே போல் தமிழக வீரர்கள் ஹரி நிசாந்த், ஜெகதீசன் ஆகியோருக்கும் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. இதில் ஜெகதீசன் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்துள்ளவர். இதனால் இவர் களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதே போன்று ஹங்கர்கேகர் அல்லது சிவம் துபேவும் ஓபனிங் இறங்கினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் எதிர்பார்க்காததை செய்வது தான் தோனி ஸ்டைல்.

Story first published: Tuesday, April 5, 2022, 19:57 [IST]
Other articles published on Apr 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+