2 முக்கிய வீரர்கள் நீக்கம்..சிஎஸ்கே ப்ளேயிங் 11ல் செய்யப்படும் அதிரடி மாற்றம்.. லக்னோ அணிக்கு தலைவலி
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில முக்கிய மாற்றங்களுடன் இன்றைய போட்டிக்கு தயாராகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் தோல்வியடைந்ததால், வெற்றிக்கணக்கை தொடங்க முனைப்பு காட்டுகிறது. குறிப்பாக சிஎஸ்கேவில் இந்த முறை முக்கிய வீரர்கள் சேர்க்கப்படவிருக்கின்றனர்.

முக்கிய மாற்றங்கள்
கடந்த போட்டியில் சிஎஸ்கேவின் பேட்டிங் தான் மோசமாக சொதப்பியது. இந்நிலையில் அதனை சரிசெய்யும் வகையில் தான் சென்னை அணியின் மிடில் ஆர்டர் தூணாக பார்க்கப்படும் மொயீன் அலி குவாரண்டைனை முடித்துவிட்டு வந்துள்ளார். ஓப்பனிங்கில் ருதுராஜ் கெயிக்வாட் - டெவோன் கான்வே ஜோடி களமிறங்க, முதல் விக்கெட்டிற்கு மொயீன் அலி விளையாடவுள்ளார்.

மிடில் ஆர்டர் பேட்டிங்
இவரை தொடர்ந்து மிடில் ஆர்டரில் அனுபவ வீரர்களான ராபின் உத்தப்பா மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் களமிறங்கவுள்ளனர். லோயர் ஆர்டரில் வழக்கம் போல கேப்டன் ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி விளையாடவுள்ளனர். மொயீன் அலியின் வருகையால் இளம் வீரர் ஷிவம் தூபே ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

4 ஆல்ரவுண்டர்கள்
சுழற்பந்துவீச்சிற்கு ஏற்கனவே ஜடேஜா, மொயீன் அலி என இரண்டு வீரர்கள் இருப்பதால் மிட்செல் சாண்டனரும் வெளியேற்றப்படவுள்ளதாக தெரிகிறது. வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் 2 ஆல்ரவுண்டர்கள் இணைக்கப்படுகிறார்கள். சீனியர் வீரர் டுவைன் பிராவோ மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தான்.
Recommended Video

பவுலிங் ஜோடி
முதன்மை பவுலர்களாக கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆடம் மில்னே மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஜோடி மீண்டும் சேரவுள்ளது. தீபக் சஹார் வரும் வரை இவர்கள் இருவரையும் ஒரு நல்ல பவுலிங் பார்ட்னர்களாக மாற்ற அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications