
சிஎஸ்கே மாற்றம்
புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. எனவே இன்று வெற்றி பெறுவதற்காக ப்ளேயிங் 11ல் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
ஓப்பனிங்கை பொறுத்தவரையில் ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு தோனி ஸ்பெஷல் வகுப்பு நடத்தியுள்ளார். இதுதான் அவருக்கான கடைசி வாய்ப்பு? இல்லையென்றால் இனி ப்ளேயிங் 11ல் இடமில்லை என்பது போன்று தெரிவித்துள்ளார்.

மிடில் ஆர்டர் மாற்றம்?
மற்றொரு ஓப்பனராக ராபின் உத்தப்பா விளையாடுகிறார். மொயீன் அலி வந்த பிறகு சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் பலம் சற்று கூடியுள்ளது. அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா கம்பேக் தர வேண்டிய சூழலில் உள்ளனர். இவர்களின் பின்னர் தோனி நல்ல ஃபார்மில் இருப்பதால் உதவுவார் என எதிர்பார்க்கப்படுக்கிறது.

தூபே இருக்கிறாரா?
ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரையில் ஷிவம் தூபே மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் இந்த முறையும் வாய்ப்பு பெறுகின்றனர். தூபே மீது பல விமர்சனங்கள் உள்ள போதும் ஜடேஜா நம்பி வாய்ப்பு தருவதாக தெரிகிறது. ஸ்பின்னர்களாக ஜடேஜா மற்றும் மொயீன் அலி உள்ளனர்.

குழப்பம்
வேகப்பந்துவீச்சாளர்களில் தான் குழப்பம் நிலவுகிறது. ஸ்பின்னர்களில் ஏற்கனவே 2 பேர் உள்ளதால் மஹீஷ் தீக்ஷணா எதற்கு என்ற கேள்வி உள்ளது. ஜோர்டன் மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் ஜோடி சேர வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இதனால் இதில் யாரை நீக்கிவிட்டு, யார் சேர்க்கப்படுவார் என்பதில் மட்டும் குழப்பம் நீடிக்கிறது.

ப்ளேயிங் 11
ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெயிக்வாட், மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் தூபே, தோனி, டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டன் / டுவைன் பிரிட்டோரியஸ் /மஹீஷ் தீக்ஷணா, முகேஷ் சௌத்ரி


Click it and Unblock the Notifications