சிஎஸ்கே ப்ளேயிங் 11 உறுதியானது.. சூரத்தில் கொடுக்கப்படும் ஸ்பெஷல் பயிற்சி.. வீரர்களின் விவரம் இதோ!!
சூரத்: சிஎஸ்கே அணியின் ப்ளேயிங் 11 என்ன என்பதை பயிற்சி ஆட்டம் மூலமே தெளிவாக கூறியுள்ளார் கேப்டன் தோனி.
ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனியை கோப்பையுடன் வழி அனுப்பி வைக்கும் நோக்கத்துடன் இருப்பதாக தெரிகிறது.

ப்ளேயிங் 11
முன்னணி வீரர்களான, தீபக் சஹார், மொயீன் அலி, ருதுராஜ் கெயிக்வாட் உள்ளிட்டோர் கலந்துக்கொள்வதில் குழப்பம் நீடித்து வருவதால் ப்ளேயிங் 11- ஐ தேர்வு செய்வதிலும் சிக்கல் உள்ளது. அவர்கள் மூன்று பேரும் இன்றி தான் தோனி இண்ட்ரா ஸ்குவாட் போட்டி வரை நடத்தினார். இந்நிலையில் அதன் மூலமே ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை தெளிவாக காட்டிவிட்டார்.

டாப் 7 பேட்ஸ்மேன்கள்
அதன்படி பார்த்தால், ஓப்பனிங் ஜோடியாக டெவோன் கான்வே - ருதுராஜ் கெயிக்வாட் உறுதியாகிவிட்டது. முதல் விக்கெட்டிற்கு ராபின் உத்தப்பாவை களமிறக்குகின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ஜடேஜா மற்றும் கேப்டன் தோனி என 7 வீரர்கள் தேர்வாகிவிட்டனர். டெவோன் கான்வேவை தவிர மற்ற அனைவரும் கடந்த சீசனில் இருந்த பேட்டிங் வரிசை ஆகும்.

பந்துவீச்சு படை
பந்துவீச்சை பொறுத்தவரையில் தீபக் சஹார் இல்லாததால் அவரின் இடத்தில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் விளையாடலாம். அவருக்கு பின்னர் பிராவோ, சொலாங்கி, ஆடம் மில்னே என தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பிராவோ, ஹங்கர்கேகர் இருவருமே அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடியவர்கள் ஆகும்.
Recommended Video

இளம் வீரருக்கு ஏமாற்றம்
இந்த ப்ளேயிங் 11-ல் தென்னாப்பிரிக்க பவுலர் டுவைன் பிரிட்டோரிய்ஸ் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிராவோ மீது நம்பிக்கை வைத்து பிரிட்டோரிய்ஸை வெளியே உட்கார வைக்கப் போகிறார் தோனி. தற்போது இவர்களை சுற்றி மட்டுமே பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications