Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் தவறு செய்யும் சிஎஸ்கே..200வது போட்டியில் வெல்லுமா? முன்னாள் வீரரை களமிறக்கிய ஆர்சிபி

மும்பை: ஐபிஎல் தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் வாய்ந்த ஆர்சிபியை எதிர்கொள்கிறது.

நவி மும்பையில் நடைபெறும் இந்தப் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா மீண்டும் டாஸை இழந்தார். இதனால் பெங்களூரு அணியால் பந்துவீச பணிக்கப்பட்டார்.

சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் டூபிளஸிஸ், தற்போது புதிய அணிக்காக விளையாடுகிறார். இதனை காணும் போது சிஎஸ்கே ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

200வது போட்டி

200வது போட்டி

சிஎஸ்கே இன்று 200வது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறது. ஆனால் கடந்த போட்டியில் செய்த தவறை மீண்டும் எந்த பயமும் இன்றி சிஎஸ்கே செய்துள்ளது. பிளேயிங் லெவனில் சிஎஸ்கே எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. அதே போல் நன்றாக பந்துவீசும் பிரிட்டோரியஸை அணியில் விட்டு நீக்கிவிட்டு வள்ளல் கிறிஸ் ஜார்டனை அணியில் மீண்டும் தக்க வைத்துள்ளது சிஎஸ்கே.

ஹங்கர்கேகர்

ஹங்கர்கேகர்

இதே போன்று வேகப்பந்துவீச்சிலும் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதிரடி இளம் வீரர் ஹங்கர்கேகரை பெஞ்சல் மீண்டும் அமர வைத்து சிஎஸ்கே அழகு பார்க்கிறது. பாவம் அந்த ஹங்கர்கேகர், வேறு அணியில் விளையாடி இருந்தால் கூட தனது திறமையை நிரூபித்து இருப்பார். சிஎஸ்கேவிடம் வந்து, சினம் கொண்ட சிறுத்தை செல்லில் சிக்கியது என்ற காமெடி போல் மாட்டி கொண்டார்.

செம பிளான்

செம பிளான்

ஆனால் பெங்களூரு அணியோ, சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் வீரரான ஜாஸ் ஹேசல்வுட்டை பிளேயிங் லெவனில் இறக்கியுள்ளது. ஹேசல்வுட் சிஎஸ்கே வீரர்களின் குறைகளையும், நிறைகளையும் நன்கு அறிந்தவர். இதனால் அவரை அணியில் சேர்த்து சூப்பர் திட்டத்தை ஆர்சிபி வகுத்துள்ளது.

எவ்வளவு டார்கெட்?

எவ்வளவு டார்கெட்?

இதே போன்று பிரபுதேசாய் என்ற ஆல்ரவுண்டரை ஆர்சிபி அணி தேர்வு செய்துள்ளது. சிஎஸ்கேவில் இருக்கும் வீக்கான பந்துவீச்சுக்கு குறைந்தது 240 ரன்கள் அடித்தால் மட்டுமே ஒரு அளவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். இல்லையெனில் கோலி, கார்த்திக், டூபிளஸிஸ் ஆகியோர் சிங்கிளாகவே சிதைத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

Story first published: Tuesday, April 12, 2022, 22:08 [IST]
Other articles published on Apr 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+