மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபில்டிங்கில் சொதப்பியது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. உத்தப்பா 25 பந்துகளில் அரைசதம், மொயின் அலி, சிவம் துபே ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல், குயின்டன் டி காக் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் சிதறடித்தனர்.
இதில் வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சது போல் பிராவோ வீசிய பந்தில் குயின்டன் டி காக் 30 ரன்கள் அடித்திருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை மொயின் அலி தவறவிட்டார். இதனால் குயின்டன் டிக்காக் 61 ரன்கள் அடித்து தான் பெவிலியன் திரும்பினார்.
இதே போன்று கேஎல் ராகுல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சிஎஸ்கே வீரர் துஸ்பாண்டே வீணடித்தார். இதனால் சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆடுகளத்தில் பனி அதிகமாக இருந்ததால், நடுவர்கள் பந்தை மாற்றினர். இருப்பினும் ஆடுகளம் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக தான் செயல்படுகிறது.