Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடருக்காக ஸ்கெட்ச் போட்ட தோனி.. சிஎஸ்கே வின் முக்கிய வீரர்களுக்கு அவசர அழைப்பு

சென்னை: ஐபிஎல் 15வது சீசன் வரும் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் கடந்த 12,13ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது.

இதில் சிஎஸ்கே அணி 25 வீரர்களை தேர்வு செய்தது. மொத்தம் 87 கோடியே 95 லட்சம் ரூபாயை சிஎஸ்கே செலவு செய்தது.

அவசர அழைப்பு

அவசர அழைப்பு

இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்காக ஏற்கனவே தோனி தனது பயிற்சியை தொடங்கிவிட்டார். 5வது முறையாக கோப்பையை வெல்ல தோனி தற்போது புதிய பிளான் ஒன்றை போட்டுள்ளார். அதாவது மற்ற அணிகளை விட, 2 வாரங்களுக்கு முன்பே பயிற்சியை தொடங்கவது என்பது தான் அந்த பிளானே. இதற்காக சிஎஸ்கே முக்கிய வீரர்களுக்கு உடனடியாக இந்தியா வரும் படி அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,

சூரத்தில் முகாம்

சூரத்தில் முகாம்

குஜராத் மாநிலம் சூரத்துக்கு மார்ச் முதல் வாரத்தில் சிஎஸ்கே வீரர்கள் வர உள்ளனர். அங்கு ஒரு வாரம் குவாரண்டைனில் இருந்துவிட்டு, பின்னர் 8ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரை அங்கு சிறப்பு பயிற்சி முகாமில் சிஎஸ்கே வீரர்கள் ஈடுபட உள்ளனர். இதில் ஒவ்வொரு வீரர்களின் திறனையும் தோனி ஆய்வு செய்து, எந்த வீரர்களை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து முடிவு எடுப்பார்.

கடுமையான பயிற்சி

கடுமையான பயிற்சி

தோனி, அம்பத்தி ராயுடு, உத்தப்பா போன்ற சீனியர்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதில்லை. இதனால், இளம் வீரர்களுடன் இணைந்து கடுமையான பயிற்சியை சீனியர்கள் மேற்கொள்ள உள்ளனர். ரஞ்சி கோப்பை முடிந்தவுடன் மேலும் சில வீரர்கள் சிஎஸ்கே அணிக்கு திரும்ப உள்ளனர்.

Recommended Video

IPL 2022-க்கு இப்போதே தயாராகும் CSK.. வீரர்களுக்கு சென்ற அவசர அழைப்பு
பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

ஒரு மாதத்திற்கு முன்பாகவே பயிற்சி எடுப்பதன் மூலம் அணியின் சூழலுக்கு புதிய வீரர்கள் தயாராக வாய்ப்பாக அமையும். மேலும் வீரர்களுக்கு இடையே பயிற்சி ஆட்டத்தையும் நடத்த தோனி திட்டமிட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மும்பையில் தான் நடைபெற உள்ளதால்,சூரத்தில் பயிற்சி செய்வதன் மூலம் தொடருக்கு சிறப்பாக தயாராகலாம் என்று தோனியும் முடிவு எடுத்துள்ளார்.

Story first published: Tuesday, February 22, 2022, 15:43 [IST]
Other articles published on Feb 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+