
தீவிர பயிற்சி
நவி மும்பையில் முகாமிட்டுள்ள சிஎஸ்கே அணி வீரர்கள் குழுவாக பிரிந்து பயிற்சி மேற்கொண்டனர். இது தொடர்பாக சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில் ருத்துராஜ் இல்லை. இதனால் ருத்துராஜ் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டுவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மொயின் அலி
இந்த பயிற்சியில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி பேட்டிங்கில் தனி கவனம் செலுத்தினார். பஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் மொயின் அலி டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால், சுமார் 45 நிமிடம் மொயின் அலி பல்வேறு பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு பேட்டிங் செய்தார்.

சீனியர்கள்
இதே போன்று சுழற்பந்துவீச்சிலும் மொயின் அலி கவனம் செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கேப்டன் ஜடேவும் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டனர். இதன் பின்னர் தோனி, உத்தப்பா, ராயுடு போன்ற வீரர்களும் வேலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த வீடியோவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததது 2 புதிய முகங்கள் தான்.

புதுமுகம்
இந்த முகாமில் ஷிம்ரன்ஜித் சிங் மற்றும் ஹங்கர்கேகர் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டனர்.பொதுவாக பிளேயிங் லெவனில் இடம்பெறும் வீரர்கள் தான் பயிற்சியில் அதிக நேரம் ஈடுபடுவார்கள். இதனால் பிளேயிங் லெவனில் முகேஷ் மற்றும் துஸ்பாண்டே ஆகியோர் நீக்கப்பட்டு, இவ்விருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











