For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ராஜா கையை வச்சா ராங்கா போனது இல்ல.. வெற்றி கணக்கை தொடங்கிய தோனி.. சிஎஸ்கே 3வது வெற்றி

புனே: ஐபிஎல் தொடரின் 15வது சிசனில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.

Recommended Video

CSK இப்போதான் பழைய பன்னீர்செல்வமா வந்துருக்காங்க.. SRH-க்கு எதிரான போட்டியில் அசத்தல் வெற்றி

கேப்டனாக பல மாதங்களுக்கு பிறகு திரும்பிய தோனிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் பிராவோ மற்றும் சிவம் துபே நீக்கப்பட்டனர்.

ருத்துராஜ் அதிரடி

ருத்துராஜ் அதிரடி

தொடக்க வீரர் கான்வேவும், ருத்துராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கினர். யான்சென் வீசிய 2வது ஓவரில் ருத்துராஜ் பளார் என சிக்சருக்கு பந்தை விரட்டினார். இருவரும் அதிரடியாக விளையாடினர். பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி சிஎஸ்கே 40 ரன்கள் எடுத்தது. நடப்பு சீசனில் முதல் முறையாக சிஎஸ்கே அணி தொடக்க வீரர்கள் பவர்பிளேவில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதன் பிறகு ருத்துராஜ் ராக்கெட் வேகத்தில் ரன் குவித்தார்.

சிஎஸ்கே இமாலய இலக்கு

சிஎஸ்கே இமாலய இலக்கு

10.5வது ஓவரில் சிஎஸ்கே அணி 100 ரன்களை கடந்தது. முதலில் பொறுமையாக விளையாடிய கான்வே, பின்னர் அதிரடியை காட்டினார். 39 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார்.57 பந்துகளில் 99 ரன்கள் எடுத்த நிலையில், 1 ரன்னில் ருத்துராஜ் சதத்தை தவறவிட்டார். இதில் 6 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 182 ரன்கள் குவித்தது. கேப்டன் தோனி 8 ரன்னில் ஆட்டமிழக்க, கான்வே 55 பந்துகளில் 85 ரன்கள் அடித்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 202 ரன்கள் எடுத்தது.

ஐதராபாத் அபாரம்

ஐதராபாத் அபாரம்

இதனையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி சிஎஸ்கேக்கு நெருக்கடி அளித்தார். அபிஷேக் 39 ரன்களும், வில்லியம்சன் 47 ரன்களும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிபாதி டக் அவுட்டாகினார்.

13 ரன்களில் தோல்வி

13 ரன்களில் தோல்வி

முக்கிய கட்டத்தில் எய்டன் மார்க்கரம் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷசாங் சிங் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். வாசிங்டன் சுந்தரும் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசி ஓவரில் ஐதராபாத் அணி வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் முகேஷ் சௌத்ரி 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 24 ரன்கள் விட்டு கொடுத்தார்.இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே 3வது வெற்றியை பதிவு செய்தது. முகேஷ் சௌத்ரி 4 விக்கெட்டை கைப்பற்றினார்.

Story first published: Sunday, May 1, 2022, 23:30 [IST]
Other articles published on May 1, 2022
English summary
IPL 2022- CSK registered 3rd win as Dhoni back as captain.. வெற்றி கணக்கை தொடங்கிய தோனி.. சிஎஸ்கே 3வது வெற்றி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+