Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி இப்படி நடந்துக்குவாரா?? மோசமாக விமர்சிக்கும் ரசிகர்கள்.. சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணம்!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி மற்றும் ஜடேஜாவை மிகவும் மோசமாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி இந்த முறையும் சொதப்பியது.

மீண்டும் பேட்டிங் சொதப்பல்

மீண்டும் பேட்டிங் சொதப்பல்

தொடக்க வீரர்கள் ராபின் உத்தப்பா 15, ருதுராஜ் கெயிக்வாட் 16 ரன்களுக்கு வெளியேறினர். இதன்பின்னர் வந்த மொயீன் அலி (48) மற்றும் அம்பத்தி ராயுடு (27) மட்டும் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட மற்ற அனைத்து வீரர்களும் சொதப்பினர். தோனி 3 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை மட்டுமே சேர்த்தது.

தோல்வி

தோல்வி

இதன் பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணியில் ஓப்பனிங் வீரர்கள் அபிஷேக் சர்மா ரன்களும், கேன் வில்லியம்சன் ரன்களும் எடுத்தனர். இதன் பின்னர் வந்த ராகுல் திரிபாதி 39 ரன்களை விளாச, அந்த அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சிஎஸ்கே தொடர்ந்து 4வது தோல்வியை தழுவியது.

சிஎஸ்கே செய்த தவறு

சிஎஸ்கே செய்த தவறு

இந்நிலையில் சென்னை அணியின் தோல்விக்கு தோனி - ஜடேஜா எடுத்த மிகப்பெரும் தவறே காரணமாக பார்க்கப்படுகிறது. தீபக் சஹார் இல்லாத சிஎஸ்கேவில் தற்போதைக்கு டுவைன் பிரிட்டோரியஸ் மட்டுமே சிறப்பாக பந்துவீசுகிறார். ஆனால் அவரை இன்றைய போட்டியில் இருந்து நீக்கிவிட்டனர். ரன்களை வாரி வழங்கி வரும் முகேஷ் சௌத்ரிக்கு வாய்ப்பு தரப்பட்டது. மேலும் இலங்கை ஸ்பின்னர் மஹீஷ் தீக்‌ஷனா சேர்க்கப்பட்டார். அவர் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை.

மற்றொரு தவறு

மற்றொரு தவறு

பிரிட்டோரியஸுக்கு பதிலாக டுவைன் பிராவோவை நீக்கியிருக்கலாம். ஆனால் சீனியர் என்பதற்காக வைத்துக்கொண்டனர். இதே போல U19 உலகக்கோப்பையை கலக்கிய ஆல்ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் வாய்ப்பே கிடைக்காமல் இருந்து வருகிறார். இவர்கள் இருந்திருந்தால் சுலபமாக இலக்கை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

 என்னதான் காரணம்

என்னதான் காரணம்

எனவே சென்னை அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை தோனி மற்றும் ஜடேஜா மதிக்கவில்லை என்றும், சிஎஸ்கே அணிக்குள் சீனியாரிட்டி விளையாடுவதாகவும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சமீப காலங்களில் தோனி எடுக்கும் முடிவு தவறாக போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

Story first published: Saturday, April 9, 2022, 19:28 [IST]
Other articles published on Apr 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+