Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நேர திருப்பம்.. சிஎஸ்கேவின் தோல்வியால் தலைவலி.. ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்ற அணிகள் எது??

மும்பை: சென்னை அணியின் தோல்வியால் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கிய ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

68 லீக் போட்டிகள் முடிந்துள்ள சூழலில் 3 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளன.

 ப்ளே ஆஃப் போட்டி

ப்ளே ஆஃப் போட்டி

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 10 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2வது இடத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. 18 புள்ளிகளுடன் இரு அணிகளும் உள்ளன.

 சிஎஸ்கேவின் தாக்கம்

சிஎஸ்கேவின் தாக்கம்

நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் சிஎஸ்கே தோல்வியடைந்துவிட்டதால், அந்த அணி 2வது இடத்திற்கு முன்னேறிவிட்டது. முதல் குவாலிஃபையரில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தான் மோதவுள்ளது. லக்னோ அணி ரன்ரேட் அடிப்படையில் 3வது இடத்திற்கு சென்றுள்ளது.

ஆர்சிபிக்கு குழப்பம்

ஆர்சிபிக்கு குழப்பம்

தற்போது வரை டூப்ளசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி 14 போட்டிகளில் 16 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டெல்லி அணி வெற்றி பெற்றுவிட்டால் ரன்ரேட் அடிப்படையில் டெல்லி அணி முன்னேறிவிடும்.

கௌரவப் போட்டிகள்

கௌரவப் போட்டிகள்

4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று 9வது இடத்தில் உள்ளது. ஒருவேளை மும்பை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் கடைசி இடத்தை தவிர்க்கும். எனவே கடைசி இடத்தை பெற்றுவிடக்கூடாது என்ற போட்டி சூடுபிடித்துள்ளது.

ப்ளே ஆஃப் சுற்று

ப்ளே ஆஃப் சுற்று

ப்ளே ஆஃப் போட்டிகள் வரும் மே 24ம் தேதியன்று தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். முதல் எலிமினேட்டர் போட்டி 25ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 27ம் தேதியன்று 2வது எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இறுதிப்போட்டி மே 29ம் தேதி நடைபெறவுள்ளது.

Story first published: Saturday, May 21, 2022, 10:34 [IST]
Other articles published on May 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+