Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களை மதிக்காத சிஎஸ்கே ? தமிழக அமைப்பின் எதிர்ப்பை மீறி இலங்கை வீரருக்கு வாய்ப்பு.. தோனி பிளான்?

மும்பை: தமிழக அமைப்பின் கோரிக்கையையும் மீறி சிஎஸ்கே அணி இலங்கை வீரர் மகிஷ் தீக்சனாவை பிளேயிங் லெவனில் களமிறக்கியுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் இலங்கை வீரர் தீக்சனாவை 70 லட்சம் ருபாய்க்கு சிஎஸ்கே அணி தேர்வு செய்தது.

அப்போது தமிழக அமைப்புகளை சேர்ந்த பலரும், சிஎஸ்கே அணியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இலங்கை வீரர்கள்

இலங்கை வீரர்கள்

இலங்கை தமிழர்கள் விவகாரம் உச்சம் தொட்ட போது, அந்நாட்டை சேர்ந்த எந்த வீரரும், நிர்வாகிகளும் தமிழகத்தில் விளையாட கூடாது என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார். இதன் காரணமாக சிஎஸ்கே அணி இலங்கை வீரர்களை ஏலத்தில் எடுக்காமல் தவிர்த்து வந்தது.

முரளிதரன் விவகாரம்

முரளிதரன் விவகாரம்

இலங்கை தமிழரும், சென்னையில் பெண் எடுத்த கிரிக்கெட் ஜாம்பவான் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். அப்போது தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு தலைவர்களும் விஜய் சேதுபதியை அந்தப் படத்திலிருந்து விலக வலியுறுத்தினர். இதனையடுத்து, அந்த படம் கைவிடப்பட்டது.

தீக்சனா

தீக்சனா

இந்த நிலையில், சிஎஸ்கே அணி மீண்டும் இலங்கை வீரர் தீக்சனாவை அணியில் ஏலத்தில் எடுத்ததும் மட்டுமல்லாமல் தற்போது பிளேயிங் லெவனில் சேர்த்துள்ளது. இன்று ஐதராபாத் அணிக்கு எதிரான 17வது லீக் ஆட்டத்தில் தீக்சனா விளையாடுகிறார். சிஎஸ்கேவின் இந்த முடிவு, தமிழ் அமைப்பின் உணர்வுகளை பாதித்துள்ளது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இதனால் சிஎஸ்கே அணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே சிஎஸ்கே அணியை நிராகரிப்போம் என்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆனது. அணியின் தேவைக்காக தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தாலும்,தற்போது இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது.

Story first published: Saturday, April 9, 2022, 16:41 [IST]
Other articles published on Apr 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+