
முதலில் பொறுமை
இதனையடுத்து, இந்தப் போட்டியில் புது மாப்பிள்ளை கான்வேவும், ருத்துராஜ் கெய்க்வாட்டும் தொடக்க வீரராக களமிறங்கினர். முதல் ஓவரில் சிஎஸ்கே 3 ரன்கள் மட்டுமே அடித்தது. யான்சென் வீசிய 2வது ஓவரில் ருத்துராஜ் பளார் என சிக்சருக்கு பந்தை விரட்டினார். இதனைத் தொடர்ந்து இருவரும் அதிரடியாக விளையாடினர். பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி சிஎஸ்கே 40 ரன்கள் எடுத்தது.

ருத்துராஜ் அதிரடி
நடப்பு சீசனில் முதல் முறையாக சிஎஸ்கே அணி தொடக்க வீரர்கள் பவர்பிளேவில் ஆட்டமிழக்க இருந்தனர். அதன் பிறகு ருத்துராஜ் ராக்கெட் வேகத்தில் ரன் குவித்தார். 33 பந்துகளில் அரைசதம் கடந்த ருத்துராஜ், ரன் குவிப்பை 5வது கியருக்கு நகர்த்தினார். 10.5வது ஓவரில் சிஎஸ்கே அணி 100 ரன்களை கடந்தது.

செம பெர்பார்மன்ஸ்
இந்த இன்னிங்ஸ் மூலம் ருத்துராஜ் கெய்க்வாட், 31இன்னிங்சில் ஆயிரம் ரன்களை விளாசியதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சச்சின் சாதனையை சமன் செய்தார்.முதலில் எபாறுமையாக விளையாடிய கான்வே, பின்னர் அதிரடியை காட்டினார். 39 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார்.

சிஎஸ்கே 202 ரன்கள் இலக்கு
57 பந்துகளில் 99 ரன்கள் எடுத்த நிலையில், 1 ரன்னில் ருத்துராஜ் சதத்தை தவறவிட்டார். இதில் 6 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 182 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் ஐதராபாத் எதிராக அதிக ரன்கள் ஓபனிங் பார்ட்னர்சிப் வைத்த ஜோடி என்ற பெருமையை ருத்துராஜ், கான்வே படைத்தது. இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி 8 ரன்னில் ஆட்டமிழக்க, கான்வே 55 பந்துகளில் 85 ரன்கள் அடித்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 202 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications











