சிங்கம் களமிறங்கிடுச்சி.. ருத்துராஜின் மெர்சல் ஆட்டம்.. மாஸ் காட்டிய சிஎஸ்கே.. ஆனால் ரன்கள் போதுமா ?
புனே: ஐபிஎல் 15வது சீசனில் 29வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் அணியும் களமிறங்கியது.
இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக ஹர்திக் விலகிய நிலையில், ரஷித் கான் கேப்டனாக செயல்பட்டார்.
குஜராத் அணியில் அல்சாரி ஜோசப் மற்றும் சாஹா ஆகியோர் பிளேயிங் லெவனில் களமிறங்கினர். சிஎஸ்கே அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

சொதப்பல் தொடக்கம்
இதனையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மொயின் அலியும் 1 ரன்னில் போல்ட் ஆனார். இதனால் சிஎஸ்கே தடுமாறியது. தொடர்ந்து சில போட்டிகளாக சொதப்பி வந்த ருத்துராஜ் கெய்க்வாட் , இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

மாஸ் காட்டிய ருத்துராஜ்
ருத்துராஜ்க்கு , ராயுடுவும் துணை நின்று களத்தில் அதிரடியை காட்டினார். ருத்துராஜ் வழக்கம் போல் வேகப்பந்துவீச்சாளர்களை ஸ்விப் செய்து சிக்சருக்கு விரட்டினார். 37 பந்துகளில் அரைசதம் விளாசிய ருத்துராஜ் 4 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் விரட்டினார். இதே போன்று ராயுடுவும் இறங்கி வந்து தனது முத்திரை ஷாட்களை ஆடினார்.

5 சிக்சர்கள்
31 பந்துகளில் 46 ரன்கள் விளாசிய ராயுடு, 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் விளாசினர். மறுமுனையில், தொடர்ந்து அதிரடி காட்டிய ருத்துராஜ் 48 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். முக்கிய கட்டத்தில் ருத்துராஜ் வெளியேற, சிஎஸ்கே அணி கொஞ்சம் தடுமாறியது.

170 ரன்கள் இலக்கு
இறுதியில், சிவம் துபே 17 பந்துகளில் 19 ரன்களும் , ஜடேஜா 12 பந்தில் 22 ரன்கள் அடிக்க, சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. குஜராத் அணிக்காக அறிமுக போட்டியில் விளையாடிய அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரசித் கான் 4 ஓவருக்கு 29 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். தோனி பேட்டிங் செய்ய வராதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது.


Click it and Unblock the Notifications