For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்- சாதனை படைத்த சிஎஸ்கே.. முதல் பந்தில் 6 விளாசிய தல தோனி.. அடித்த ரன்கள் போதுமா?

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் தொடரில் சிஎஸ்கே அணி தனது 2வது லீக், லக்னோ அணியுடன் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசியது.

இந்த சீசனில் 6 போட்டிகளில் 5 போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்த அணி தான் வென்றது. இதனால் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் சிஎஸ்கே அணி களமிறங்கியது.

இதனால் சென்னை அணியில் மொயின் அலி, பிரிட்டோரியஸ் மற்றும் முகேஷ் சௌத்ரி ஆகியோர் ஆகியோர் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்பட்டார்.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

இதே போன்று தொடக்க வீரராக முதல் ஆட்டத்தில் களமிறங்கிய கான்வே நீக்கப்பட்டு, ராபின் உத்தப்பா தொடக்க வீரராக புரோமேஷன் பெற்றார். வேகப்பந்துவீச்சுக்கு எதிராக உத்தப்பா அதிரடியாக விளையாடுவார் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டது. ஆவேஷ் கான் வீசிய ஆட்டத்தின் முதல் 2 பந்திலேயே பவுண்டரிகளை விளாசி ராபின் உத்தப்பா அதிரடி தொடக்கத்தை அளித்தார். இதே போன்று சமிரா வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரில் உத்தப்பா தனது பழைய ஸ்டைலில் ஷாட்களை ஆடி சிக்ஸ் பவுண்டரி என விரட்டினார். இதனால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.

தொடர்ந்து பவுண்டரி

தொடர்ந்து பவுண்டரி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் தேவையில்லாமல் ஓடி ரன் அவுட் ஆனார். இதன் பின்னர் உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்த மொயின் அலி, அதிரடி காட்டினார். இதனால் இந்த ஜோடியை கட்டுப்படுத்த முடியாமல் ராகுல் திணறினார். இதே போன்று குர்னல் பந்துவீச்சை பவுண்டரி, சிக்சர், பவுண்டரி என மொயின் அலி அடிக்க அந்த ஓவரில் 16 ரன்கள் அடித்தது. சிஎஸ்கே பவர்பிளேவில் 73 ரன்கள் அடித்து, நடப்பு சீசனில் அதிகபட்ச ஸ்கோரை நிர்ணயித்தது

100 ரன்கள்

100 ரன்கள்

இதனால் சிஎஸ்கே அணி பவர் பிளேவில் 73 ரன்களை விளாசியது. சிறப்பாக விளையாடிய உத்தப்பா 50 ரன்களில் ரவி பிஸ்னாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய மொயின் அலி 35 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இன்றைய ஆட்டத்தில் அடித்தே ஆட வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கிய சிவம் துபே யுவராஜ் சிங்கை நினைவுப்படுத்தினார்.

Recommended Video

LSG vs CSK : Lewis, De Kock Star As LSG Beat CSK By 6 Wickets In Thriller | Oneindia Tamil
தோனி அபாரம்

தோனி அபாரம்

இதே போன்று ராயுடுவும் 20 பந்துகளில் 27 ரன்கள் அடித்தார். சிறப்பாக விளையாடிய துபே 49 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் ஜடேஜா 9 பந்துகளில் 17 ரன்கள் அடிக்க, தோனி முதல் பந்திலேயே சிக்சர் விளாசி அசத்தினார். 6 பந்துகளில் 16 ரன்கள் தோனி அடிக்க , டி20 போட்டியில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார். 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது.

Story first published: Thursday, March 31, 2022, 21:57 [IST]
Other articles published on Mar 31, 2022
English summary
IPL 2022 – CSK set the big target of 211 for LSG ஐபிஎல்- சாதனை படைத்த சிஎஸ்கே.. முதல் பந்தில் 6 விளாசிய தல தோனி.. அடித்த ரன்கள் போதுமா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+