மைதானத்தை அலறவிடும் தோனியின் சிக்ஸர்..!! வாயைப் பிளந்த இளம் வீரர்கள்.. தரமான சம்பவம் ரெடி - வீடியோ!
சூரத்: சிஎஸ்கே பயிற்சி முகாமில் தோனி அடித்த சிக்ஸர்களை பார்த்து இளம் வீரர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
Recommended Video
ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சூரத்தில் பயிற்சி முகாமை தொடங்கிவிட்டது.

தோனி ஃபார்ம்
கடந்த சீசனில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது பேட்டிங் ஃபார்ம் தான். ருதுராஜ், டூப்ளசிஸ், அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, ஜடேஜா என அடுத்தடுத்து ரன்களை குவித்து அசத்தினர். ஆனால் தோனியின் வழக்கமான பேட்டிங்கை மட்டும் ரசிகர்களால் பார்க்க முடியவில்லை. டெல்லிக்கு எதிரான ப்ளே ஆஃப் சுற்றின் போது மட்டும் அதிரடி காட்டியிருந்தார்.

ஸ்பெஷல் பயிற்சி
இந்நிலையில் இந்த சீசனில் முன்கூட்டியே களமிறங்க வேண்டிய பொறுப்பு தோனிக்கு உள்ளது. இளம் வீரர்கள் அதிகம் இருப்பதால் மேல் வரிசையில் விளையாட வேண்டும். இதனால் முழு முழுக்க சிக்ஸர்களை பறக்கவிடுவதற்கு மட்டும் பயிற்சிகளை எடுத்து வருகிறார். வழக்கமான டிஃபன்ஸ் பேட்டிங் மீது கவனம் செலுத்தும் தோனி, இந்த முறை சூரத்தில் பயிற்சி முகாம் தொடங்கியதில் இருந்து அதிரடி காட்டுவதற்காகவே தயாராகி வருகிறார்.

வீடியோ
இதுகுறித்த வீடியோவையும் அணி நிர்வாகம் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறது. அதில் அடுத்தடுத்து தோனி பறக்கவிடும் சிக்ஸர்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதுவும் அவர் ஒரு கையில் சிக்ஸர் அடித்ததை பார்த்து இளம் வீரர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
தோனியின் திட்டம்
ஐபிஎல் "பி" குரூப்பில் இடம்பெற்றுள்ள சென்னை அணி தனது முதல் போட்டியாக வரும் மார்ச் 26ம் தேதியன்று கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. போட்டி மும்பை வான்கடே மைதானத்தின் பிட்ச்- தன்மையும், சூரத் பிட்ச் தன்மையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். எனவே இதற்காகவே சூரத் மைதானத்தை தேர்வு செய்துள்ளார் தோனி.


Click it and Unblock the Notifications