
ஜடேஜா முதல் போட்டி
ஆனால் ஜடேஜா கேப்டனாக தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவினார். இது ஜடேஜாவுக்கு சோகமான சாதனையாக பார்க்கப்படுகிறது. எனினும் இதில் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. கடந்த சீசனில் முதல் போட்டியிலும் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. ஆனால் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதனால் இம்முறையும் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கலாம்.

ஆடுகளம் மீது பழி
இதனிடையே தோல்வி குறித்து பேசிய ஜடேஜா, போட்டியின் 2வது பகுதியில் ஆடுகளம் சிறப்பாக பேட்டிங்கிற்கு ஒத்துழைத்தது. பனிப் பொழிவு காரணமாக எங்களால் சரியாக பந்துவீச முடியவில்லை.அதே போல் நாங்கள் பேட்டிங் செய்யும் போது ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்தது. இதனால் எங்களுக்கு ரன் சேர்க்க சிரமமாக இருந்தது.

திருத்தி கொள்வோம்
பிராவோ சிறப்பாக பந்துவீசினார். மற்ற பவுலர்களும் நன்றாக செயல்பட்டனர். ஆனால் பேட்டிங்கில் தான் சொதப்பினோம். பேட்டிகில் நாங்கள் சரியாக பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடவில்லை. இந்தப் போட்டியில் நிகழ்ந்த தவறை அடுத்த போட்டியில் திருத்தி கொள்வோம் என்று ஜடேஜா கூறினார்.

எங்கே தவறு?
ஜடேஜா கூறியது ஒரு அளவுக்கு உண்மை என்றாலும், டாஸ் விழுவது என்பது நம் கையில் இல்லை. தொடக்க வீரர்கள் ருத்துராஜ், கான்வே ஆகியோர் சொதப்பியதும், நன்றாக விளையாடிய அம்பத்தி ராயுடு மோசமான ரன் அவுட்டில் சிக்கியதும் தான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி சென்னைக்கு பின்னடைவை தந்தது. சிஎஸ்கே தனது 2வது போட்டியில் லக்னோ அணியை வரும் 31ஆம் தேதி எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications











