Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தீபக் சாஹர் விளையாடும் தேதி அறிவிப்பு.. மகிழ்ச்சியில் சிஎஸ்கே அணி.. இனி கலக்கல் தான்

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

Recommended Video

Deepak Chahar-க்கு மாற்று? CSK-வில் சேர்க்கப்பட்ட புதிய வீரர்

அனைத்து அணிகளுக்கும் முன்பாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத்தில் பயிற்சியை தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், அனைத்து சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியிலும் ஒரே கேள்வி தான் உள்ளது. தீபக் சாஹர் இந்த சீசனில் விளையாடுவாரா ? மாட்டாரா என்பது தான்.

தீபக் சாஹர் ஓய்வு

தீபக் சாஹர் ஓய்வு

அந்த வகையில் , தீபக் சாஹருக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் மீண்டு வருகிறார். இதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்த அவர், தற்போது ஓய்வில் உள்ளார். தீபக் சாஹர் அணியில் இல்லை என்றால், அணி பேலன்சில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தீபக் சாஹருக்கு பதிலாக மாற்று வீரரை தயார் செய்யும் பணியில் சிஎஸ்கே இறங்கியது.

திரும்பும் தேதி

திரும்பும் தேதி

இந்த நிலையில், தீபக் சாஹர் ஏப்ரல் பாதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பிவிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி பெங்களூருவுக்கு எதிரான போட்டி அல்லது ஏப்ரல் 17 குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முழு பலம்

முழு பலம்

இதன் மூலம் ஏப்ரல் 21ஆம் தேதி மும்பைக்கு எதிரான முக்கிய போட்டியில் சிஎஸ்கே முழு பலத்துடன் களமிறங்கும். தீபக் சாஹர் இல்லாமல் முதல் 5 அல்லது 6 போட்டியில் தான் சிஎஸ்கே விளையாடும். இது ரசிகர்கள் அச்சப்பட்டது போல் சிஎஸ்கேவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தாது. ஆனால் தீபக் சாஹர் பழைய ஃபார்மோடு திரும்புவாரா என்ற கேள்வி மட்டும் உள்ளது.

11 பேரும் பேட்டிங்

11 பேரும் பேட்டிங்

தீபக் சாஹர் அணிக்கு திரும்பினால், விளையாடும் 11 பேரும் பேட்டிங் செய்யும் அணி என்ற பெருமை சிஎஸ்கே விற்கு சேரும். இதனால் மிடில் ஆர்டர் சொதப்பினாலும், விக்கெட்டுகள் விழுந்தாலும் பயப்படாமல் ரசிகர்கள் போட்டியை பார்க்கலாம். சாஹரின் வருகையின் மூலம் பந்துவீச்சும் பலமாகும்.

Story first published: Wednesday, March 9, 2022, 15:21 [IST]
Other articles published on Mar 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+