
பொலார்ட் Vs பிராவோ
சிஎஸ்கேக்கு எதிராக எப்போதும் அதிரடியாக விளையாடக் கூடியவர் பொலார்ட். மும்பைக்கு எதிராக சிஎஸ்கே தோற்ற அனைத்து ஆட்டங்களிலும் பொலார்ட் ஏதாவது ஒரு வகையில் காரணமாக இருப்பார். பிராவோ பந்துவீச்சில் பொலார்ட் வெளுத்து வாங்கி இருக்கிறார். ஆனால் 9 முறை அவுட் ஆகி இருக்கிறார். இதனால் பொலார்ட் பேட்டிங் வரும் போது, மெதுவாக பந்துவீச கூடிய வீரர்களை சிஎஸ்கே பயன்படுத்த வேண்டும்.

சூர்யகுமார் Vs ஜடேஜா
இதே போன்று மும்பை அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் சூர்யகுமார் யாதவை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். சூர்யகுமார் இதுவரை ஜடேஜா பந்துவீச்சில் 53 பந்துகளை எதிர்கொண்டு 41 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் 3 முறை சூர்யகுமார் அவுட் ஆகியுள்ளார். ஆனால் ஜடேஜாவின் பந்துவீச்சு ஃபார்ம் இம்முறை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பும்ராவுக்கு கவுண்டர் அட்டாக்
மும்பை அணியின் பந்துவீச்சு பலமே பும்ரா தான். இதனால் பும்ராவை கடந்த முறை சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் அட்டாக் செய்தார். இதே போன்று ஒரு யுத்தியை இம்முறை சிஎஸ்கே பயன்படுத்த வேண்டும். இதே போன்று அண்டர் 19 அதிரடி வீரர் ஹங்கர்கேகரை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் கொண்டு வந்தே தீர வேண்டும்.

வேண்டவே வேண்டாம்
சிஎஸ்கே பிளேயிங் லெவனில் கிறிஸ் ஜார்டன் இருந்தால் சிஎஸ்கே ரசிகர்கள் டிவியை ஆஃப் செய்துவிடுவது நலம். சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் அவரது பந்துவீச்சு தான்.இதனால் அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸை அணியில் சேர்க்க வேண்டும். இதனை செய்தால் மும்பைக்கு ஒரு அளவுக்கு நெருக்கடி தரலாம்.


Click it and Unblock the Notifications











