
கம்பேக் கொடுக்கும் சீனியர்
இந்தாண்டு இந்திய அணியின் சிறந்த ஸ்பின்னர் யார் என கேட்டால் அஸ்வினின் பெயர் தான் தானாக வரும். 4 வருடங்களுக்கு பிறகு டி20 போட்டிகளுக்கு திரும்பிய அவர் சைலண்ட் ஆயுதமாக திகழ்கிறார். ஐபிஎல் தொடரில் இதுவரை 167 போட்டிகளில் விளையாடி இருக்கும் அஸ்வின் 145 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அவரின் எகானமி வெறும் 6.91 மட்டுமே ஆகும். இப்படிப்பட்ட அனுபவ வீரரான அஸ்வின், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார். எனவே சிஎஸ்கேவுக்கு லோயர் ஆர்டரில் பேட்ஸ்மேன் தேவைப்படுவதால் மீண்டும் அவரை அதிக தொகை கொடுத்தாவது எடுக்கும் எனத் தெரிகிறது

ஹரி நிஷாந்த்
தமிழ்நாட்டின் டி20 வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்தவர்கள் பட்டியலில் 10வது இடத்தில் இருப்பவர் ஊட்டியை சேர்ந்த செழியன் ஹரி நிஷாந்த். ஓப்பனிங் பேட்ஸ்மேனான இவர் கடந்த வருடம் மட்டும் 16 போட்டிகளில் 446 ரன்களை குவித்துள்ளார். சராசரி 34.30 ஆகும். சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தும் இவரின் இயற்கையான ஆட்டம் சிஎஸ்கேவின் ஓப்பனிங்கிற்கு தேவைப்படும்.
கடைசியாக நடந்த சையது முஷ்டக் அலி தொடரில் நிஷாந்த் அடித்த 246 ரன்களும் தமிழ்நாடு அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது. அந்த தொடரில் அவரின் சராசரி 41 ஆக இருந்தது. கடந்தாண்டு 20 லட்சத்திற்கு சிஎஸ்கேவால் எடுக்கப்பட்டு வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிஷாந்திற்கு இந்த வருடம் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கலாம்.

அடுத்த தோனி
2021ம் ஆண்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெயர் ஷாருக்கான். இந்திய அணியின் ஃபினிஷராக இவர் இடம்பிடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டில் 16 உள்நாட்டு போட்டிகளில் ஆடிய இவர் 189 ரன்களை விளாசினார். அவரின் சராசரி 47.25 ரன்கள் ஆகும். இவர் கடந்தாண்டு ஐபிஎல்-ல் மட்டும் 134 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 153 ரன்கள் விளாசினார். மெகா ஏலத்தில் அதிக டிமாண்டாக இருக்க போகும் ஷாருக்கானை தோனியை போன்ற ஃபினிஷராக உருவாக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது.

நாராயன் ஜெகதீசன்
தோனி இருக்கும் போது சிஎஸ்கேவுக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவைப்பட மாட்டார். ஆனால் எதிர்காலத்தை கணக்கில் வைத்தால் நிச்சயம் நாராயன் ஜெகதீசன் தேவைப்படுவார். எந்த இடத்தில் களமிறக்கினாலும், சூழலை புரிந்து ஆடும் இவர், 2021ம் ஆண்டில் மட்டும் 568 ரன்களை குவித்துள்ளார். இவரின் சராசரி 43.69 ஆகும். கடந்தாண்டு தமிழ்நாடு அணிக்காக அதிக ரன் அடித்த வீரர் இவரே. இப்படிப்பட்ட வீரரை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்து பயிற்சி கொடுத்தால் தோனிக்கு அடுத்தபடியாக பயன்படுத்தலாம்.

இளம் வீரர் சாய் கிஷோர்
ஐபிஎல் பவர் ப்ளே ஓவர்களில் சிஎஸ்கேவை போன்று அதிக ரன்களை வாரி வழங்கும் அணி எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சிக்கலை சமாளிக்க நிச்சயம் சாய் கிஷோர் தேவைப்படுவார். சுழற்பந்துவீச்சாளரான சாய் கிஷோர், ஆட்டத்தின் எந்தவொரு இடத்திலும் பந்துவீசி ரன் ரேட்டை கட்டுப்படுத்துவார். கடந்தாண்டு மட்டும் 16 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அவரின் எகானமி 5.46 மட்டுமே. குறிப்பாக சேப்பாக்கம் மைதானத்தில் இவரின் தேவை அதிகமாக இருக்கலாம்.
Recommended Video

சிஎஸ்கேவின் தேவை
சிஎஸ்கேவை பொறுத்தவரையில் தற்போது ஓப்பனிங், மிடில் ஆர்டர், பவுலர், அடுத்த ஃபினிஷர், விக்கெட் கீப்பர் என எதிர்காலத்திற்கே தேவையான வீரர்கள் வேண்டும். அதனை பூர்த்தி செய்ய இந்த 5 தமிழக வீரர்களையும் மெகா ஏலத்தில் எடுக்க குறிவைத்துள்ளது. அணிக்கு அதிக செலவுகள் ஏற்படக்கூடாது என நினைக்கும் தோனி, பட்ஜெட்டையும் மனதில் வைத்து இந்த 5 வீரர்களை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











