Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் சிஎஸ்கே.. எதிர்பார்க்காத "புது" படையை தட்டி தூக்கிய சென்னை.. இதை நோட் பண்ணீங்களா?!

சென்னை: ஐபிஎல் 2022 ஏலத்தில் சிஎஸ்கே அணி பல புதிய இளம் வீரர்களை ஏலம் எடுத்துள்ளது.

2022 ஐபிஎல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏலத்திற்கு முன்பாகவே சிஎஸ்கே அணி தோனி, ஜடேஜா, ருத்துராஜே ஆகியோரை ரீ டீயின் செய்துவிட்டது.

இந்த நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி டு பிளஸிஸை எடுக்க தவறியது. இவர் பெங்களூர் அணியால் எடுக்கப்பட்டார். அதேபோல் ஷரத்துல் தாக்கூர் டெல்லி அணியால் எடுக்கப்பட்டார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

நேற்று சிஎஸ்கே அணியில் முழுக்க முழுக்க பழைய சிஎஸ்கே வீரர்கள் மட்டுமே எடுக்கப்பட்டனர். கடந்த வருடங்களில் சிஎஸ்கே அணிக்காக ஆடிய வீரர்களை தேடி தேடி சிஎஸ்கே எடுத்தது. பிராவோ- 4.4 கோடி ரூபாய், ராபின் உத்தப்பா- 2 கோடி ரூபாய், ராயுடு- 6.75 கோடி ரூபாய், தீபக் சாகர்- 14 கோடி ரூபாய், கேஎம் ஆசிப் - 20 கோடி ரூபாய் ஆகிய வீரர்கள் என்று சிஎஸ்கே அணியால் மீண்டும் எடுக்கப்பட்டனர்.

ஏலம்

ஏலம்

இன்று சிஎஸ்கே அணி திட்டமிட்டு இளம் வீரர்களை தேடி தேடி எடுத்தது. ஆல் ரவுண்டர் ஷிவம் துபே- Rs 4 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். மேலும் சிம்ரன்ஜீத் சிங்- Rs 20 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டு இருக்கிறார். சுப்ரான்ஸு சேனாபதி - Rs 20 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டு உள்ளார். இன்று சிஎஸ்கே எடுத்த டாப் வீரர் என்றால் அது தேவன் கான்வாய்- Rs 1 கோடி ரூபாய்தான்.

ஐபிஎல் சிஎஸ்கே

ஐபிஎல் சிஎஸ்கே

ஏனென்றால் அவரை சிஎஸ்கே ஓப்பனிங் வீரராக இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் வேகமாக ஆட கூடியவர் என்றாலும் களத்தில் நின்று சிறப்பாக ஆடுவார். இப்போது நல்ல பார்மில் உள்ளார். இன்னொரு பக்கம் ஆடம் மில்னே- Rs 1.9 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார். இவர் சிறப்பாக பாஸ்ட் பவுலிங் செய்வார் என்பதால் ஹசல்வுட்டிற்கு நல்ல மாற்றாக இருப்பார்.

 தேஷ்பாண்டே

தேஷ்பாண்டே

இது போக துஷார் தேஷ்பாண்டே- 20 கோடி ரூபாய், மகேஷ் தீக்ஸ்சான்- Rs 70 லட்சம் ரூபாய், ராஜவர்த்தன் ஹங்காகேகர் - Rs 1.5 கோடி ரூபாய் ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர் . இவர் விஜய் ஹசாரே, சையது முஷ்டக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடியவர். இவருடைய சிறப்பம்சம் ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு இன் ஸ்விங் செய்ய கூடியவர். பொதுவாக ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு ரைட் ஹேண்ட் பவுலர்கள் அவுட் ஸ்விங் செய்வார்கள். ஆனால் ராஜ்வர்தன் ஹங்காகேக இன் ஸ்விங் செய்வார்.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

அதோடு இவரின் இன்னொரு சிறப்பம்சம். இவர் சிறப்பான பேட்ஸ்மேனும் கூட. கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன். அண்டர் 19 போட்டிகளில் இவர் முரட்டு அடி அடித்த ஆட்டங்கள் பல உள்ளன. இது போக தென்னாப்பிரிக்க வீரர் டிவைன் பிரெடெரிஸ் - R 50 லட்சம் ரூபாய், மிட்சல் சான்டனர்- Rs 1.9 கோடி ரூபாய் ஆகியோர் எடுக்கப்பட்டு உள்ளனர்.

புது முகம்

புது முகம்

மேலும் இளம் வீரர்கள் முகேஷ் சவுதாரி- Rs 20 லட்சம் ரூபாய், பிரஷாந்த் சோலங்கி- Rs 1.2 கோடி ரூபாய் ஆகியோர் எடுக்கப்பட்டு உள்ளனர். இதில் சில நெட் பயிற்சியில் மட்டுமே பயன்படுத்தப்படுவார்கள். மற்ற வீரர்களில் சிலர் அணியில் இடமபெர் வாய்ப்பு உள்ளது. இதனால் சிஎஸ்கே அணி பல புதிய வீரர்களை இந்த முறை பெற்று புதிய தோற்றம் பெற்றுள்ளது.

Story first published: Sunday, February 13, 2022, 19:30 [IST]
Other articles published on Feb 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+