Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேக்கு எதிராக ஹர்திக் விலகல்.. போட்டோ போட்ட சில நேரத்திலேயே அறிவிப்பு.. என்ன நடந்தது?

மும்பை: ஐபிஎல் தொடரின் 29வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கவில்லை. இதனால் புதிய கேப்டனாக ரஷித் கான் களமிறங்கினார்.

இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், போட்டி தொடங்குவதற்கு முன் ஹர்திக் பாண்டியா தோனியுடன் ஹோட்டலில் சிரித்த முகத்துடன் போட்டோ எடுத்து டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

IPL 2022- CSK vs GT- Hardik Pandya ruled out from csk team

ஆனால் கடைசி நேரத்தில் தசை பிடிப்பு ஏற்பட்டுவிட்டது என்று கூறி போட்டியிலிருந்து விலகினார். இது குஜராத் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக அல்சாரி ஜோசப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று மோசமான ஃபார்மில் இருந்த மேத்தீவ் வேட், அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக சாஹா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஆட்டத்தில் டாஸை மீண்டும் இழந்த சிஎஸ்கே, குஜராத் அணியால் பேட்டிங் செய்ய பணித்தது. இதனையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மொயின் அலியும் 1 ரன்னில் போல்ட் ஆனார். இதனால் சிஎஸ்கே தடுமாறி வருகிறது.

Recommended Video

Punjab Team-ல் Captain மாறியது ஏன்? Dhawan கொடுத்த விளக்கம்

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. காயத்திலிருந்து குணமடைந்த மிலனுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அதிரடி ஆல்ரவுண்டரான ஹங்கர்கேகர் ஏன் இன்னும் சிஎஸ்கே பிளேயிங் லெவனில் இல்லை என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

Story first published: Sunday, April 17, 2022, 20:36 [IST]
Other articles published on Apr 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+