Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவருக்கா இந்த நிலைமை.. அதிர்ஷ்டத்தை நம்பி ஏமாந்த அம்பத்தி ராயுடு..சிஎஸ்கே பேட்டிங்கில் சுவாரஸ்யம்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Recommended Video

IPL 2022 :Kolkata Knight Riders Beat Chennai Super Kings By 6 Wickets | Oneindia Tamil

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் என்பதால் அதிக ரன் அடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் சிஎஸ்கே களமிறங்கியது.

டக்அவுட்

டக்அவுட்

ஆட்டத்தின் முதல் பந்தே உமேஷ் யாதவ் நோ பால் வீசினார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், டக் அவுட் ஆனார். கடந்த 2020ஆம் ஆண்டு சீசனிலும் கெய்க்வாட் இதே போன்று டக் அவுட்டாகி, இறுதியில் ஹாட்ரிக் அரைசதம் விளாசி வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வாங்கினார்.

கான்வே அவுட்

கான்வே அவுட்

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களமிறங்கிய நியூசிலாந்து வீரர் கான்வே, பெரிய ஷாட் ஆட முற்பட்டு 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து அனைத்து பொறுப்புகளும் ராயுடு தலை மீது விழுந்தது. ராயுடு அதிரடியாக விளையாடி ரன் குவிக்க முற்பட்டார்.

ராயுடுக்கு லக்

ராயுடுக்கு லக்

இந்த நிலையில், ஆட்டத்தின் 5 புள்ளி 5வது ஓவரில் ஒரு பெரிய ஆச்சரியம் நிகழ்ந்தது. கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தை ராயுடு அடிக்க முற்பட்ட போது, அது ஸ்டம்பை பதம் பார்த்தது. ஆனால் ஸ்டம்பில் இருந்த பைல்ஸ் நகரவும் இல்லை, கீழே விழுவும் இல்லை. ஆனால் பந்தோ பவுண்டரிக்கு சென்றது.

சிஎஸ்கே தடுமாற்றம்

சிஎஸ்கே தடுமாற்றம்

இதனால் ராயுடுவுக்கு மேலும் ரன் குவிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ராயுடு 15 ரன்கள் எடுத்த போது தேவையில்லாமல் ரன் அவுட்டாகி, தனது விக்கெட்டை கொல்கத்தா வீரர்களுக்கு பரிசை அளித்தார். அதிரடியாக விளையாடிய உத்தப்பாவும் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க சென்னை அணி தற்போது தடுமாறி வருகிறது.

Story first published: Saturday, March 26, 2022, 21:38 [IST]
Other articles published on Mar 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+