“அடப்பாவமே.. இவ்வளவு மோசமா..!!” சிஎஸ்கே - கொல்கத்தா புள்ளிவிவரம்.. அசரவைக்கும் தோனியின் ரெக்கார்ட்!
மும்பை: ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தாவுக்கு மோசமான நினைவுகளை கொடுத்து வைத்துள்ளது சென்னை அணி.
15வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் நாளை மறுநாள் மும்பையில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து லீக் போட்டிகளையும் மும்பை, புனே நகரங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை vs கொல்கத்தா
கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் தான் மோதின. மோர்கன் தலைமையில் பலமானதாக இருந்த கொல்கத்தா அணியை தோனி கூலாக ஊதி தள்ளினார். இதனையடுத்து இந்தாண்டு ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் சிஎஸ்கே பழிவாங்கப்படும் என அரைக்கூவல் விடுக்கின்றனர். எனினும் வரலாறுகள் அவர்களுக்கு எதிராக தான் உள்ளது.

புள்ளிவிவரங்கள்
ஐபிஎல் வரலாற்றில் சென்னை - கொல்கத்தா அணிகள் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை தோனி தலைமையிலான சென்னை அணி 17 முறை வெற்றி பெற்றுள்ளது. பல கேப்டன்களை மாற்றிய போதும், கொல்கத்தா 8 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இதில் முக்கியமான வெற்றி என்றால், கடந்த 2012ம் ஆண்டு இறுதிப்போட்டியில் சென்னையை வீழ்த்தி கொல்கத்தா தனது முதல் கோப்பையை வென்றது.

ஸ்பெஷல் அம்சம்
கொல்கத்தாவுக்கு எதிராக சிஎஸ்கேவிடம் மற்றொரு ஸ்பெஷல் அம்சமும் உள்ளது. அதாவது ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒரு சீசனில் கூட கொல்கத்தாவுடன் 2 லீக் போட்டிகளிலும் சென்னை அணி தோற்றதே கிடையாது. 2 போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும், அல்லது ஒரு போட்டி மட்டும் தவறிவிடும். இதுதான் தோனிக்கே உண்டான சிறப்பு.
Recommended Video

கடைசி வெற்றி?
சென்னை அணியை கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு தான் கொல்கத்தா வீழ்த்தியுள்ளது. அதுவும் 10 ரன்கள் வித்தியாசத்தில் தான். எனவே புதிய கேப்டன், புதிய படையுடன் வந்துள்ளதால் இந்தாண்டு தோனியின் வியூகத்தை உடைத்து வெற்றி பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications