Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL : எதிர்பாராத சிக்கல்; முற்றிலும் புதுமுகம்.. சிஎஸ்கே அணி பலம் மற்றும் பலவீனம் என்ன??.. ஓர் அலசல்

மும்பை: ஐபிஎல் தொடருக்கான தற்போதைய சென்னை அணியின் பலம் மற்றும் பலவீனம் என்னவென்று பார்க்கலாம்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் களமிறங்குவதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

சிஎஸ்கே பலம்

சிஎஸ்கே பலம்

இத்தனை வருடங்களாக சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக இருப்பது அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் நீண்ட பேட்டிங் ஆர்டரும் தான். உத்தப்பா, அம்பத்தி ராயுடு, பிராவோ என இந்த முறையும் சீனியர் வீரர்கள் எடுக்கப்படுள்ளனர். ஓப்பனிங்கில் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் டெவோன் கான்வே என அதிரடி நாயகர்கள் களமிறங்குவார்கள். அவர்களின் பின்னால் அம்பத்தி ராயுடு,உத்தப்பா, மொயின் அலி ஆகியோர் உள்ளனர். லோயர் ஆர்டரில் ஜடேஜா, தோனி, பிராவோ, ஷிவம் தூபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் என மீக நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது.

சிஎஸ்கே பலவீனம்

சிஎஸ்கே பலவீனம்

கடந்த 2 சீசன்களாக பவர் ப்ளே ஓவர்களிலேயே எதிரணியை திணறடித்து வந்தது சிஎஸ்கே. இதற்கு காரணம் தீபக் சஹார் தான். ஆனால் தீபக் சஹார் முதல் பாதி தொடரில் இருக்க மாட்டார் எனத்தெரிகிறது. இந்த முறை ஷர்துல் தாக்கூரும் இல்லை. இதனால் இந்தாண்டு கிறிஸ் ஜோர்டன், பிராவோவை வைத்து தான் ஜடேஜா சமாளிக்க வேண்டும். பேட்டிங் பழைய கூட்டணி அமைந்த போதும், பவுலிங்கில் புது படையை உருவாக்க வேண்டும்.

 முக்கிய சிக்கல்

முக்கிய சிக்கல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியுள்ளார். அவரின் கேப்டன்சியில் வீரர்கள் நம்பிக்கையுடன் களமிறங்கவிருந்தனர். தற்போது திடீரென ஜடேஜா தான் கேப்டன் என வெளியான அறிவிப்பு, வீரர்களுக்கு ஏமாற்றத்தையும், பதற்றத்தையும் உண்டாக்கலாம். இதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு கேப்டன் ஜடேஜாவுக்கு இருக்கும்.

Recommended Video

IPL 2022: CSK vs KKR Possible Playing 11, Match preview | OneIndia Tamil
இளம் வீரர்களுக்கு ஜாக்பாட்

இளம் வீரர்களுக்கு ஜாக்பாட்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்கள் தேர்வு இந்த ஐபிஎல் தொடர் மூலம் நடைபெறலாம். இதனால் சிஎஸ்கேவில் உள்ள ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ருதுராஜ் கெயிக்வாட், ஷிவம் தூபே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால் இந்திய தேர்வுக்குழு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கலாம்.

Story first published: Saturday, March 26, 2022, 8:01 [IST]
Other articles published on Mar 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+