Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்- சிஎஸ்கே வுக்கு ஆபத்து தரக்கூடிய 4 வீரர்கள்.. கொல்கத்தா அணியின் செம பிளான்

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் இன்று முதல் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Recommended Video

IPL 2022: CSK vs KKR Possible Playing 11, Match preview | OneIndia Tamil

இந்தப் போட்டிக்காக இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இன்றைய ஆட்டத்தில் டாஸ் வீச தோனி வர மாட்டார் என்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு சோகமான விஷயம் தான்.

இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு ஆபத்தை விளைவிக்கும் 4 கேகேஆர் வீரர்கள் குறித்து தற்போது காணலாம்.

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்

கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது மிகவும் அபாயகரமான வீரராக விளங்குகிறார். இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டி கொண்ட தொடரில் 201 ரன்கள் விளாசிய அவர் 3 இன்னிங்சிலும் ஆட்டமிழக்காமல் அசுர ஃபார்மில் உள்ளார். இதனால் இவரை கட்டுக்குள் வைப்பதே மிகவும் சிரமமான விஷயமாக இருக்கும்.

வெங்கடேஷ் ஐயர்

வெங்கடேஷ் ஐயர்

கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக விளங்கும் வெங்கடேஷ் ஐயரும் நல்ல ஃபார்மில் உள்ளார். பயிற்சி ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார். டி20 உலககோப்பை அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதால் அவர் இம்முறை சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தொடக்க வீரராக மிரட்டுவதால், இவரை விரைவில் ஆட்டமிழக்க வைக்க வேண்டும்.

ரஸில்

ரஸில்

கொல்கத்தா அணியின் அதிரடி ஆல் ரவுண்டராக விளங்குபவர் ரஸில். ஆட்டத்தை தனி நபராக மாற்றும் ஆற்றல் படைத்தவர். சிஎஸ்கேவிற்கு எதிராக சிறப்பாக கடந்த காலங்களில் விளையாடக் கூடியவர். இதனால் சிஎஸ்கேவிற்கு பெரிய ஆபத்தே இவரிடமிருந்து தான் வரும். ரஸில் கட்டுக்கோப்பாக பந்துவீசக் கூடியவர்.

சுனில் நரைன்

சுனில் நரைன்

சுனில் நரைனை கண்டாலே சிஎஸ்கே வீரர்களுக்கு ஆகாது. சிஎஸ்கே அணி வீரர்களுக்கு பல முறை எமனாக சுனில் நரைன் இருந்துள்ளார். சுனில் நரைன் பந்துவீச்சை சுத்தமாக தோனி எதிர்கொள்ள முடியாமல் திணறி இருக்கிறார். இதுவரை 83 பந்துகளில் 44 ரன்கள் மட்டுமே தோனி அடித்துள்ளார். இவர்களை சமாளித்தால் சிஎஸ்கேவிற்கு முதல் வெற்றி எளிதாகிவிடும்.

Story first published: Saturday, March 26, 2022, 16:06 [IST]
Other articles published on Mar 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+