Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே பெற்ற ஸ்பெஷல் பவர்.. இன்றைய ஐபிஎல் போட்டி.. முதல் வெற்றிக்காக பக்கா ப்ளான்!!

மும்பை: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.

7வது லீக் போட்டியான இது மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில் முதல் வெற்றியை பதிவு செய்ய முனைப்புடன் உள்ளது.

களமிறங்கும் சீனியர்

களமிறங்கும் சீனியர்

சென்னை அணியை பொறுத்தவரையில் ப்ளேயிங் 11ல் முக்கிய மாற்றத்துடன் களமிறங்கவுள்ளது. கடந்த போட்டியில் டாப் ஆர்டர் சொதப்பியவுடன், அந்த பதற்றத்திலேயே மிடில் ஆர்டருடம் சொற்ப ரன்களுக்கு சரிந்தது. எனவே இன்றைய போட்டியில் சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் தூணான மொயீன் அலி களமிறங்குகிறார். தோனியும் ஃபார்முக்கு வந்துவிட்டதால் ஆட்டம் களைக்கட்டப் போகிறது.

 இளம் வீரர் வருகிறாரா?

இளம் வீரர் வருகிறாரா?

இதே போல சென்னை அணியின் லோயர் ஆர்டரில் பேட்டிங் செய்யவும், வேகப்பந்துவீச்சில் உதவவும் தேவை உள்ளது. இதற்காக U 19 வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை களமிறக்க சென்னை அணி திட்டமிட்டுள்ளது. பிராபோர்ன் மைதானம் நல்ல பேட்டிங் டிராக் ஆகும். இதனால் 200 ரன்கள் வரை எதிர்பார்க்கலாம்.

லக்னோவின் நிலைமை

லக்னோவின் நிலைமை

ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கியுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, தனது முதல் ஆட்டத்திலேயே தோல்வியை சந்தித்தது. குறிப்பாக கே.எல்.ராகுலின் மோசமான கேப்டன்சி தான் வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வியடைய காரணமாக இருந்தது என மோசமான விமர்சனங்கள் எழுந்தது. இதனை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் ராகுல் இருக்கிறார்.

Recommended Video

LSG vs CSK : Badoni, Lewis help LSG seal maiden IPL win with victory over CSK | Oneindia Tamil
ப்ளேயிங் 11 மாற்றமா

ப்ளேயிங் 11 மாற்றமா

லக்னோ அணியை பொறுத்தவரையில் பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் சமபலமான ப்ளேயிங் 11 உள்ளது. கடைசி சில ஓவர்களை மெயின் பவுலர்களுக்கு வழங்காமல், பார்ட் டைம் பவுலர்களுக்கும் ஸ்பின்னர்களுக்கும் வழங்கியதில் தான் தவறு நடந்துவிட்டது. எனவே அதனை சரிசெய்துக்கொண்டு இன்று வரவுள்ளனர்.

Story first published: Thursday, March 31, 2022, 17:40 [IST]
Other articles published on Mar 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+