For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவுட்டா ? நாட் அவுட்டா? மூன்றாம் நடுவர் முடிவால் சர்ச்சை.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மும்பை வீரர்கள்

மும்பை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே எதிரான ஆட்டத்தில் மூன்றாம் நடுவரின் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு சீசனில் நடுவரின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஓயிட் அறிவிப்பது,எல்பிடபிள்யூ கணிப்பதில் நடுவர்கள் தொடர்ந்து தவறான முடிவுகளை அறிவித்து வருகின்றனர்.

மும்பை குற்றச்சாட்டு

மும்பை குற்றச்சாட்டு

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்தப் போட்டியின் முடிவு இரு அணிக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் ஒரு தவறு நடந்தால் கூட, போட்டியின் முடிவும், தொடரின் முடிவும் மாறிவிடும்.இந்த நிலையில் தான் ஒரு தவறு நடந்துவிட்டதாக மும்பை அணி வீரர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மூன்றாம் நடுவர்

மூன்றாம் நடுவர்

ஆட்டத்தின் 8 ஓவரை அறிமுக சுழற்பந்துவீச்சாளர் ஹிர்த்திக் வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தில் உத்தப்பா 21 ரன்கள் எடுத்த போது, அவர் அடித்த பந்தை பந்துவீச்சாளர் ஹிர்த்திக்கே தாவி பிடித்தார். இதனையடுத்து மும்பை இந்திய அணி வீரர்கள் கொண்டாடினர். ஆனால் கள நடுவர் இதில் சந்தேகம் இருப்பதாக கூறி, மூன்றாம் நடுவரின் உதவியை நாடினார்.

விதி என்ன சொல்கிறது?

விதி என்ன சொல்கிறது?

இதன் ரீப்ளே காட்சியில் ஹிர்த்திக் பந்தை பிடிக்கும் போது, அது தரையில் பட்டது போல் ஒரு கேமிரா ஆங்களில் தெரிந்தது. மறு ஆங்கிளில் அவர் பந்து பிடிக்கும் போது விரல்கள் பந்துக்கு கீழே, தரையில் படாமல் தடுத்தது போல் தெரிந்தது. ஆனால், இது போன்ற ரீப்ளேவில் தெளிவான ஆதாரங்கள் இல்லை என்றால் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக அறிவிக்கலாம் என்ற முடிவின் படி , அதனை மூன்றாம் நடுவர் நாட் அவுட் என்று அறிவித்தார்.

Recommended Video

MI vs CSK: Ravindra Jadeja Bows Down To MS Dhoni After Dhoni’s Last Over Heroics | Oneindia Tamil
வாக்குவாதம்

வாக்குவாதம்

இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நடுவர் விளக்கம் அளித்ததை அடுத்து, மும்பை அணி வீரர்கள் கலைந்து சென்றனர். இதற்கு அடுத்த பந்தே உத்தப்பா சிக்சர் விளாசினார். இறுதியில் உத்தப்பா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இது போன்ற சூழலில் கள நடுவர்கள் Soft signal அளித்தால், அது தான் இறுதி முடிவாக அறிவிக்கப்படும். ஆனால் தற்போது Soft signal முறை கைவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 21, 2022, 23:33 [IST]
Other articles published on Apr 21, 2022
English summary
IPL 2022- CSK vs MI- Third umpire decision created controversy அவுட்டா ? நாட் அவுட்டா? மூன்றாம் நடுவர் முடிவால் சர்ச்சை.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மும்பை வீரர்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+