Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஒரு வெற்றிதான்.. சிஎஸ்கேவின் தலையெழுத்தே மாறும்.. இன்று ஐபிஎல்-ல் உள்ள சுவாரஸ்ய விஷயம்!

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் சென்னை அணிக்கு மகிழ்ச்சியான செய்தி காத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.

புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள இந்த இரு அணிகளுக்கும் இன்று முக்கிய போட்டியாக இது மாறியுள்ளது.

இன்றைய போட்டி

இன்றைய போட்டி

ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே, ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய இனி உள்ள 7 போட்டிகளில் 5 வெற்றிகளையாவது பெற வேண்டும். வீரர்கள் அனைவரும் ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் நல்ல கம்பேக் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று வெற்றி பெற்றால் ஒரே அடியாக புள்ளிப்பட்டியலில் மாற்றம் ஏற்படும்.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் குஜராத் டைடன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ அணிகள் தலா 10 புள்ளிகளுடன் நீடித்து வருகின்றன. 5வது இடத்தில் ஆர்சிபி அணி 10 புள்ளியுடன் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 6 புள்ளிகளுடன் 6,7,8 ஆகிய இடங்களில் உள்ளன. சென்னை அணி 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.

புள்ளிப்பட்டியல்

புள்ளிப்பட்டியல்

இன்று நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றுவிட்டால், ரன் ரேட் அடிப்படையில் 6 புள்ளிகளுடன் டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் அணிகளை பின்னுக்குத் தள்ளி, 6ஆவது இடத்தை பிடித்துவிட முடியும். ப்ளே ஆஃப் வாய்ப்பும் பிரகாசமாகும்.

Recommended Video

PBKS vs CSK: Ruturaj Gaikwad மோசமான செயலால் பெரும் அடிவாங்கிய CSK | Oneindia Tamil
ப்ளே ஆஃப்

ப்ளே ஆஃப்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதமுள்ளது. ஒவ்வொரு அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற குறைந்தது 14 புள்ளிகளை பெற வேண்டும். 10 அணிகள் என்பதால் 2 புள்ளிகள் சேர்த்தே தேவைப்படலாம். அந்த வகையில் சென்னை அணி அடுத்த 7 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 25, 2022, 17:50 [IST]
Other articles published on Apr 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+