Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 நாள் லீவிற்கு பிறகு சிஎஸ்கே இன்று மோதல்.. முதல் வெற்றியை பெறுமா சிஎஸ்கே? தோனி எடுத்த அதிரடி முடிவு

மும்பை: ஐபிஎல் தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

நவி மும்பை டி.ஓய் பாட்டில் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை.

இதனால் முதல் வெற்றி பெற சிஎஸ்கே, எஸ்ஆர்ஹச் அணிகள் கடுமையாக மோதி கொள்ளும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

முதல் வெற்றி

முதல் வெற்றி

சிஎஸ்கே முதல் முறையாக நடப்பு சீசனில் மதியம் நடைபெறும் போட்டியில் விளையாடுகிறது. இதனால் பனிப் பொழிவு பிரச்சினை இருக்காது என்பதால் டாஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. மேலும் மின்னொளி விளக்குகளும் இருக்காது என்பதால் பந்து பெரிய அளவில் ஸ்விங் ஆகாது. இதனால் முதல் வெற்றியை பெற சிஎஸ்கே அணிக்கு நல்ல வாய்ப்பு.

சிஎஸ்கே பலவீனம்

சிஎஸ்கே பலவீனம்

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை ருத்துராஜ் கெய்க்வாட் தொடர்ந்து சொதப்புவது பின்னடைவாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியிலும் அவர் ரன் குவிக்க தவறினால் பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது சிக்கலாகி விடும். இதே போன்று மொயின் அலி, ஜடேஜா ஆகியோர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஜொலித்தால் மட்டுமே சிஎஸ்கே பழைய சிஎஸ்கே போல் மாறும்.

ஐதராபாத் பேட்டிங்

ஐதராபாத் பேட்டிங்

சென்னை அணியின் பெரிய குறையே ஒரு நல்ல அனுபவம் உள்ள இந்திய வேகப்பந்துவீச்சாளர் இல்லாதது தான். அது அணியின் பெரிய மைனசாக பார்க்கப்படுகிறது. ஹங்கர்கேகர் அல்லது துஸ்பாண்டே இன்றைய ஆட்டத்தில் களமறிங்கலாம். சிஎஸ்கே அணியை போலவே ஐதராபாத்தும் தொடர்ந்து 2 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. அபிஷேக் சர்மா, வில்லியம்சன், திரிபாதி, மார்க்கரம், நிக்கோலஸ் பூரான், வாசிங்டன் சுந்தர் என திறமையான வீரர்கள் உள்ளனர்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

எனினும் இதில் யாரும் பெரிய ஸ்கோர் அடிக்காததால் ஐதராபாத் அணியின் பேட்டிங் தடுமாறி வருகிறது. பந்துவீச்சில் உம்ரான் மாலிக், நடராஜன், புவனேஸ்வர் குமார் என அந்த அணி ஒரு அளவிற்கு பலமாகவே உள்ளது. இதுவரை சிஎஸ்கே, ஐதராபாத் அணிகள் 16 முறை மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே 12 முறையும், ஐதராபாத் 4 முறை மட்டுமே வென்றுள்ளது.

Story first published: Saturday, April 9, 2022, 13:45 [IST]
Other articles published on Apr 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+