சிஎஸ்கே அணியிலிருந்து மொயின் அலி நீக்கம்.. ஜடேஜா எடுத்த முடிவால் நன்றி சொன்ன ரோகித்.. என்ன காரணம்?
மும்பை: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளி பட்டியலில் மும்பை கடைசி இடத்தில் உள்ளது
சென்னை அணி 9வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் மும்பை தோற்றால் தொடரிலிருந்து வெளியேறிவிடும்.
இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 8 ஆட்டங்களில் மும்பை அணி 6 முறையும், சிஎஸ்கே அணி 2 முறையும் தோற்றுள்ளது. இதனால் பழைய கணக்கை தீர்க்க சென்னை அணியும் இன்று களம் காண்கின்றனர்.

டாஸ்
நவிமும்பையில் நடைபெறும் டி. ஓய் பாட்டில் மைதானத்தில் இதுவரை 11 போட்டிகளில் 2வJ பேட்டிங் செய்யும் அணியே 6 போட்டியில் வென்றுள்ளது. இந்த நிலையில், டாஸ் வென்ற ஜடேஜா பந்துவீசுவதாக அறிவித்தார். மேலும் சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கிறிஸ் ஜார்டன் நீக்கப்பட்டு, பிரிட்டோரியஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.

அதிரடி நீக்கம்
இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தாலும், நட்சத்திர வீரர் மொயின் அலியை நீக்கிவிட்டு, மிட்செல் சாண்டனரை அணியில் சேர்த்து அதிர்ச்சி அளித்துள்ளார் ஜடேஜா இதே போன்று மும்பை அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டேனியல் சாம்ஸ், மெர்டித் மற்றும் ஹிரித்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரோகித் கருத்து
எஞ்சிய போட்டியில் வெல்ல வேண்டும் என்பதால், கடும் நெருக்கடியில் மும்பை உள்ளது.இருப்பினும், ஒரு நாளைக்கு ஒரு போட்டி என்று மட்டும் தான் நினைத்து விளையாடுகிறோம். இனி ஏதும் எங்கள் கையில் இல்லை என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.டாஸ் வென்றாலும் பேட்டிங் செய்ய தான் காத்திருந்தோம் என்றும் ரோகித் கூறினார்.
Recommended Video

என்ன காரணம்
கடந்த சீசனில் சென்னை அணி 200 ரன்களுக்கு மேல் அடித்தும், அது மும்பை அணி அழகாக செஸ் செய்து சாதனை படைத்தது. இதனால் சென்னை அணியின் பந்துவீச்சும் வீக்காக இருப்பதால், மும்பை அடிக்கும் ரன்களை வெற்றிக்கரமாக துரத்தி விடலாம் என்ற யுத்தியை தோனி, ஜடேஜா கையில் எடுத்து உள்ளனர். இதுவரை எந்த அணியும் தொடர்ந்து 7 போட்டியில் தோற்றதே இல்லை.


Click it and Unblock the Notifications