Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 குழந்தை பெத்துக்குங்க.. விராட் கோலிக்கு வார்னர் சொன்ன அறிவுரை.. பேட்டிங் சொதப்பலுக்கு இது காரணமா?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு டேவிட் வார்னர் அளித்துள்ள அறிவுரை ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மிஷின் என்று அழைக்கப்பட்ட விராட் கோலி தற்போது இரண்டரை ஆண்டுகளாக சதம் விளாசாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

சரி, கேப்டன் என்ற பொறுப்பால் ஏற்படும் அழுத்தத்தால் அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை என்று கூறி கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார்.

ஸ்ட்ரைக் ரேட் மோசம்

ஸ்ட்ரைக் ரேட் மோசம்

ஆனால், அதன் பிறகும் விராட் கோலியின் பேட்டிங்கில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. தொடர்ந்து 2 முறை கோல்டன் டக், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சொதப்புவது, சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழப்பது என விராட் கோலி திணறுகிறார். கடந்த 2 போட்டிகளாக விராட் கோலி ரன் அடித்தாலும் அவர் ஸ்ட்ரைக் ரேட் மோசமாக உள்ளது.

முன்னாள் வீரர்கள் அறிவுரை

முன்னாள் வீரர்கள் அறிவுரை

இதனால் விராட் கோலி கிரிக்கெட்டிலிருந்து விடுமுறை எடுத்து கொண்டு

மீண்டும் புத்துணர்வோடு விளையாட வேண்டும் என்று ரவி சாஸ்த்ரி வலியுறுத்தியுள்ளார். பல்வேறு வீரர்களும் இந்த சரிவை சந்தித்து மீண்டு வந்தது போல, விராட் கோலியும் மீண்டு வருவார் என கேவின் பீட்டர்சன் நம்பிக்கை தெரிவித்தார்.

கோலியை போல் வார்னர்

கோலியை போல் வார்னர்

இந்த நிலையில், விராட் கோலியை போல் கிரிக்கெட்டில் சொதப்பி, தன்னுடைய பிஎல் கேப்டன் பதவியை இழந்தவர் டேவிட் வார்னர். ஆனால், டி20 உலககோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். தாம் எப்படி ஃபார்மை மீட்டேன் என்பது குறித்து அவர் விராட் கோலிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Recommended Video

IPL 2022: Sanga's Cricket Wrap | Dhoniயை திட்டிய Virat Kohli? | Arjun Tendulkar's Debut?|
வார்னரின் அறிவுரை

வார்னரின் அறிவுரை

அதில், இன்னும் 2 குழந்தைகளை பெத்துக்குங்க, காதல் வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள். ஃபார்ம் என்பது தற்காலிகமானது, ஆனால் தரம், திறமை என்பது எப்போதும் உள்ளது. உங்களுக்கு நிகழ்ந்தது போல் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் நிகழ்ந்து இருக்கு. பேட்டிங் அடிப்படையை பின்தொடருங்கள் என்று வார்னர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 5, 2022, 21:19 [IST]
Other articles published on May 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+