கெயில் சாதனையை உடைத்த வார்னர்.. டி20 கிரிக்கெட்டில் புதிய ரெக்கார்ட்..கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்
மும்பை: அதிரடி நாயகன் கிறிஸ் கெயிலின் சாதனையை ஒரே போட்டியில் டேவிட் வார்னர் தகர்த்து எறிந்துள்ளார்.
Recommended Video
ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 207-3 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 186-8 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியடைந்தது.

வார்னரின் பேட்டிங்
டெல்லி அணியின் தூணாக செயல்பட்டவர் வார்னர் தான். ஓப்பனிங் வீரர் மந்தீப் சிங் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வந்த மிட்செல் மார்ஷ் 10 ரன்களும், ரிஷப் பண்ட் 26 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். ஆனால் மறுமுணையில் தூண் போன்று நின்ற டேவிட் வார்னர், ஐதராபாத் அணி பவுலிங்கை பொளந்துக்கட்டினார்.

பழிவாங்கிய வார்னர்
58 பந்துகளை சந்தித்த வார்னர் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 92 ரன்களை விளாசினார். இவருக்கு உறுதுணையாக நின்ற ரோவ்மென் போவெல் 35 பந்துகளில் 67 ரன்களை விளாசினார். இவர்களை கடைவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாததால் 20 ஓவர்களில் டெல்லி அணி 207 ரன்களை குவித்தது.

வார்னர் சாதனை
இந்நிலையில் ஒருபுறம் வார்னர் ஐதராபாத் அணியை பழித்தீர்த்தாலும், மற்றொரு புறம் புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது நேற்றைய போட்டியில் வார்னர் 34 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை விளாசிய வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் தான் இருந்து வந்தார்.

சாதனையாளர்கள் பட்டியல்
அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியல்
- டேவிட் வார்னர் - 89
- கிறிஸ் கெயில் - 88
- விராட் கோலி - 77
- ஆரோன் ஃபிஞ்ச் - 70
- ரோகித் சர்மா - 69


Click it and Unblock the Notifications